ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுகான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, July 27, 2023

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுகான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது?

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுகான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது?
2023-2024 ஆம் கல்வி ஆண்டின் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுகான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

 இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கை: 

2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர்/ உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு (மாவட்டத்திற்குள் மட்டும்) 03.08.2023 தேதி நடைபெறும்.

 இத்துறை பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / இடைநிலை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) 04.08.2023 அன்றும் காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கபட்டுள்ளது.

No comments:

Post a Comment