யூடியூப்பில் இருந்து நேரடியாக வருமானம் பெற, ஒருவர் குறைந்தது 500 சப்ஸ்கிரைபர்கள், கடந்த 90 நாட்களில் 3 வீடியோக்களை பொது பார்வைக்கு பதிவேற்றி இருக்க வேண்டும். கடந்தாண்டு 3,000 மணி நேரங்கள் பார்வை நேரம் அல்லது கடந்த 90 நாட்களில் 30 லட்சம் சார்ட்ஸ் பார்வைகளை கடந்திருக்க வேண்டும்.
தகுதி பெற்ற கிரியேட்டர், சேனல் மெம்பர்ஷிப், சூப்பர் சாட், சூப்பர் ஸ்டிக்கர்ஸ், சூப்பர் தாங்க்ஸ், தனிப்பட்ட பொருட்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.
கூகுள் ஆட்சென்ஸ் (Adsense) பொறுத்தவரை, யூடியூப் கிரியேட்டர், குறைந்தபட்சம் 1,000 சப்ஸ்கிரைபர் மற்றும் கடந்தாண்டு 4,000 மணி நேரம் பார்வை நேரங்களை கொண்டிருக்க வேண்டும்.
இந்த தகுதியை அடைந்தவர், வீடியோ ஒளிபரப்பாகும் போது இடையில் வரும் விளம்பரங்களால் வருமானம் ஈட்ட இயலும்.கடந்த பிப்ரவரி முதல், சார்ட்ஸ் விளம்பரங்கள் வாயிலாக கிடைக்கும் தொகையை கிரியேட்டர்களுடன் பகிர்ந்து வருகிறது.
யூடியூப்பில் இடம்பெறும் விளம்பர வகைகள் என்னென்ன?:
யூடியூப் வீடியோவில் கீழ்க்கண்ட பல வகையான விளம்பரங்கள் இடம்பெறும்.
1. டிஸ்பிளே விளம்பரம் : உங்கள் வீடியோவின் வலது புறத்தில் மேல்பகுதியில் வரும் விளம்பரத்தை டிஸ்பிளே விளம்பரம் எனப்படும்.
2. ஓவர்லே விளம்பரம் : உங்கள் வீடியோவின் பேனரில் கீழ்ப்புறத்தில் வரும் விளம்பரம் ஓவர்லே விளம்பரம் எனப்படும்.
3. பம்பர் விளம்பரம் : வீடியோ பார்க்கும் முன்னர் வரும் ஸ்கிப் செய்யமுடியாத விளம்பரம், பம்பர் விளம்பரம் எனப்படும். இந்த விளம்பரம் 6 வினாடிகள் அல்லது அதற்கு
குறைவாக இருக்கும்.
4. ஸ்பான்சர்டு கார்ட்ஸ் : வீடியோவின் வலதுபுறத்தில் இடம்பெறும் வீடியொ தொடர்புடைய விளம்பரம், ஸ்பான்சர்டு கார்டு எனப்படும்.
5. மிட் ரோல் ஆட்ஸ் : வீடியோக்களில் 10 வினாடிகளுக்கு மேல் இடம்பெறும் விளம்பரம் மிட்ரோல் ஆட்ஸ் எனப்படும். ஸ்கிப், ஸ்கிப் செய்ய இயலாத வீடியோக்கள் இதில் இடம்பெறலாம்.
கிரியேட்டர், தன்னிச்சையாக அல்லது யூடியூப் நிறுவனத்தின் விளம்பரம் என இதில் எது இடம்பெறுவதென முடிவு செய்யலாம்.
இதுபோன்ற விளம்பரங்கள் வாயிலாக குறைந்தபட்சம் 100 டாலர் வருமானம் ஈட்டிய உடன், கிரியேட்டருக்கு யூடியூப் சார்பில் மின்னஞ்சல் அனுப்பபடும். கிரியேட்டர்கள் யூடியூப் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும் மறந்துவிட வேண்டாம்.
ஒவ்வொரு 1,000 விளம்பர பார்வைகளுக்கும், விளம்பரதாரர்கள் குறிப்பிட்ட தொகையை யூடியூப்பிற்கு செலுத்துவர். அதில், 45 சதவீதம் யூடியூப் நிறுவனம் எடுத்துகொள்ளும்.
மீதமுள்ள தொகை மட்டுமே கிரியேட்டருக்கு கிடைக்கும்.
யூடியூப் சார்ட்ஸ் (Shorts) பொறுத்தவரை, மொத்த பார்வைகளின் எண்ணிக்கை பொறுத்து, வரும் வருவாயில் கிரியேட்டருக்கு 45 சதவீத தொகை அளிக்கப்படும்.
உதாரணமாக, தனிநபர் நிதி மேலாண்மை தொடர்பான வீடியோக்கள் பதிவிடும் போது, அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதன் வாயிலாக கிரியேட்டரின் விளம்பர விகிதம் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment