'கோரிக்கைகள் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை' :ஜாக்டோ ஜியோ - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, July 22, 2023

'கோரிக்கைகள் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை' :ஜாக்டோ ஜியோ

'கோரிக்கைகள் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை' :ஜாக்டோ ஜியோ
கோரிக்கைகள் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை' என, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர், அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 தமிழக நிதி துறை அமைச்சருக்கு, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அவசர கடிதம் ஒன்றை நேற்று முன்தினம் அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

 ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன், அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு மற்றும் மகேஷ் ஆகியோர், ஏப்.,8ல் பேச்சு நடத்தினர். இந்த பேச்சு நடந்து, மூன்று மாதம் கடந்து விட்டது. 

 ஆனாலும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து, எந்த முன்னேற்றமும் இல்லை. காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை, மீண்டும் வழங்குவது; பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது போன்ற கோரிக்கைகள் குறித்து, அரசு மவுனமாக உள்ளது.

 இதனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அரசுக்கும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்.

 இதற்கு, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். முதல்வரிடம் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment