தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, July 8, 2023

தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். 

 ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும். 

 தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம்.

  சகலவிதமான நோய்களையும் குணமாக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

 தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது.

 தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. 

 தினமும் காலையில் சிறிதளவு புதிய பச்சை தேங்காயை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கால்சியம் மற்றுல் பாஸ்பரஸ் கிடைப்பதோடு, எலும்புகளையும் வலுப்படுத்தும்.

 தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

 தேங்காயில் இருக்கும் நீர்ச்சத்து உங்கள் உடல் மற்றும் சருமத்தை பாதுகாக்கிறது, அதைத் தவிர்த்து சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியை குறைக்கிறது.

 காக்காய் வலிப்பு உள்ளவர்கள் அதன் வலிப்பு தன்மையைக் குறைப்பதற்கு தேங்காய் பயன்படுகிறது. 

 தேங்காயில் கிட்டத்தட்ட 61 சதவீதம் வரை நார் சத்து இருக்கிறது. மேலும் இது செரிமானத்திற்கு தேவையான என்சைமினை அதிகரித்து உங்கள் உணவுகள் எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது.

 இன்று பலரும் பிரச்சினையாக பார்ப்பது இளமையில் நரைப்பது, முடி உதிர்வது, முடியின் அடர்த்தி குறைவது போன்றவைகள்தான். இதனை போக்க தேங்காயில் உள்ள புரதம் மற்றும் செலினியம் சக்தி உங்கள் கூந்தலின் அழகை அதிகரிக்க உதவும். 

 தேங்காயை சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

 சிறுநீரகத் தொற்று உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காயை உண்ண வேண்டும். இதனால் தொற்றுகளால் ஏற்படும் பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

 ஊட்டச்சத்துக்கள் 

 தேங்காய் சதையில் உயர்ந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் காணப்படுகிறது. இதில் மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன. 

 ஒரு ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் காணப்படுகிறது. இதில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன. இந்த கரையாத நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.

 செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தேங்காய் சதையில் காணப்படும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை குடல் பாக்டீரியாவை மேம்படுத்த உதவுகின்றன, இது உங்கள் செரிமான அமைப்பை மற்ற பிரச்சினைகளில் இருந்தும் வீக்கத்தில் இருந்தும் பாதுகாக்கிறது. ​

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

 தேங்காய் சதையில் காணப்படும் தேங்காய் எண்ணெய் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

 இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இது குறித்து மக்களிடையே ஆராய்ச்சி செய்த போது ஆலிவ் எண்ணெய் சாப்பிட்டவர்களை விட தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொண்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ​

உடல் எடையை குறைக்க உதவி செய்யும்

 தேங்காய் சதை உங்க உடல் எடையை குறைக்க உதவி செய்யும். இது வயிறு நிரம்பிய உணர்வை தரக் கூடியது. இதனால் நீங்கள் அதிகமாக நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது குறைக்கப்படும். அது மட்டுமல்லாமல் தேங்காயின் சதைப்பகுதி கொழுப்பு எரிபொருளாக செயல்படுகிறது என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.

 தேங்காய் சதை ஆரோக்கியமான கொழுப்பு , தாதுக்கள், நார்ச்சத்துக்கள் இவற்றின் வளமான மூலங்களாகும். மோனோ சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் தேங்காயில் உள்ளன. இவை உடனடியாக சீரணிக்கப்படுகிறது. 

 தேங்காய் சதையில் உள்ள தாதுக்கள் மாங்கனீசு, இரும்பு, தாமிரம், மற்றும் மெக்னீசியம் போன்றவை வெவ்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமானவை. 

 எனவே உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்கள் தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

 தேங்காய் சதைப்பகுதியை சாப்பிட்டு வருவது உங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவி செய்யும். இதிலுள்ள மாங்கனீசு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

ஆன்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைகள் இவற்றில் காணப்படுகிறது.

No comments:

Post a Comment