சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, July 16, 2023

சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி?

சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :

 உருளைக்கிழங்கு -4 (பொடியாக)

 மசாலா அரைத்தது ( பட்டை ,சோம்பு , பிரிஞ்சி இலை ) 

 வெங்காயம் 2 (பொடியாக) 

 மிளகாய் தூள் 1 ஸ்பூன் 

 பச்சமிளகாய் – 1

 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபில் ஸ்பூன்

 வடித்த சாதம் – தேவையான அளவு

 மரச்செக்கு நல்எண்ணெய் – 6 தேக்கரண்டி

 கருவேப்பிலை ,கொத்தமல்லி – தேவையான அளவு 

 உப்பு தேவையான அளவு.

 உருளைக்கிழங்கு சாதம் செய்யும் முறை :

 ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். 

 அதில் அரைத்த மசாலாவினை சேர்க்கவும். 

 பின் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். 

 வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு கரண்டி சேர்க்கவும். 

 இரண்டு நிமிடங்கள் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்க்கவும்.

 உருளைக்கிழங்கில் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

 பின் தேவையான அளவு மிளகாய்த்தூள் மற்றும் உப்பினை சேர்க்கவும். 

 பின்பு அரை கரண்டி மஞ்சள் தூளை சேர்க்கவும். 

 செய்த உருளைக்கிழங்கு மசாலாவை நன்றாக வதக்கவும். 

 சரியாக ஐந்து நிமிடம் முதல் ஏழு நிமிடங்கள் வரை மூடி போட்டு வைக்கவும். 

 பின்பு செய்த மசாலாவில் வடித்த சாப்பாட்டை சேர்க்கவும்.

 பின் நன்றாக வதக்கவும். இறுதியாக நன்றாக வதக்கிய பின்பு கருவேப்பிலை கொத்தமல்லி புதினா ஆகியவற்றை சேர்த்து பரிமாறலாம். 

 பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு விரைவாகவும், சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் செய்து தர இது ஒரு மிகச்சிறந்த உணவு.

No comments:

Post a Comment