புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது?அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, July 15, 2023

புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது?அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது?அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

 தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திருச்சி திருவெறும்பூரில் அளித்த பேட்டி:

 தமிழக முதல்வரின் கனவு திட்டமான காலை சிற்றுண்டி திட்டத்தை அடுத்த கட்டமாக அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தவும், துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து அவர்களை தேர்வு எழுத வைக்கவும் பள்ளி மேலாண்மை குழுவினரை வலியுறுத்தி வருகிறோம்.நம்ம ஸ்கூல் நம்ம ஊரு திட்டத்தின் மூலம் 6,796 பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. 

தற்போது பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வழக்குகளை சரி செய்து புதிய ஆசிரியர்கள் நியமிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது.

 மேலும் 3000 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு ஆறு மாதம் ஆகும். தற்காலிக ஆசிரியர்களை நியமிக்காமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களால் தற்பொழுது தொய்வு ஏற்பட்டு வருகிறது. 

அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் சீர் மரபினர் பள்ளிகளை பள்ளி கல்வித் துறையுடன் இணைப்பது குறித்து அந்தந்த துறையிடம் கருத்து கேட்ட பின், முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment