*நுரையீரல் பாதை தொடர்பான நோய்களையும், காயங்களை விரைவாகக் குணமாக்கும் தன்மையும் கொண்டது.
இதிலுள்ள தைமால் எனும் வேதிப்பொருட்களுக்கு பற்சிதைவை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாவை அழிக்கும் தன்மை இருப்பதால் பல்வேறு பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது.
*கற்பூரவல்லி இலைச்சாற்றை சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், இருமல் மற்றும் சளி தொந்தரவுகள் குறையும்.
வயிறு உப்பி, மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும். குழந்தைகளுக்கு இதன் இலைச்சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்க குணமாகும்.
*கற்பூரவல்லி, ஏலம், கிராம்பு ஆகியவற்றை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து கஷாயமாக்கி இயற்கையான தேன் சேர்த்துப் பருக, செயற்கை இருமல் டானிக்குகளின் தேவையிருக்காது.
காலை எழுந்ததும் அடுக்கடுக்கான தும்மலுடன், மூக்கில் நீர் வடிந்தால், இதன் சாற்றை நல்லெண்ணெயோடு சேர்த்து காய்ச்சித் தலைக்குத் தேய்க்கலாம்.
*இதன் இலைகளை நறுக்கி, நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, காலையிலும், மாலையிலும் கற்பூரவல்லித் தேநீராகப் பருக தொண்டைக்கு இதம் கிடைக்கும். தொண்டை கரகரக்கும்போதே சிறிதளவு இலையை மென்று சாப்பிட தொண்டையில் கட்டிய கபம் இளகும்.
*உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் களேபரங்களைத் தடுக்க, கற்பூரவல்லிச் சாற்றை நீரில் கலந்து பருகலாம்.
*தண்ணீரில் கற்பூரவல்லி இலைகளை சிதைத்துப் போட்டு ஆவி பிடிக்கலாம்.
No comments:
Post a Comment