இவர்கள், வேறு சில பிரச்னைகளுக்கு சிகிச்சைக்கு செல்லும்போதுதான், அவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதே தெரிய வருகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுமார் 70 கோடி பேர் ரத்த அழுத்தப் பிரச்சனைக்கு எந்தவித சிகிச்சையும் எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான். எனவே, ஒவ்வொரு நபரும் தனது ரத்த அழுத்த அளவை தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியமானது.
பொதுவாக ஒவ்வொருவருக்கும் உடலில் ரத்த அழுத்தம் என்பது mmHg என்னும் அளவீடால் அளக்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தின் அளவு 120/80 mmHg ஆக இருந்தால், உடலில் ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது என்று அர்த்தம். இதுவே 130/80 mmHg க்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் (high blood pressure) என்றும் 90/60 mmHg என்ற அளவிலோ அல்லது குறைவாகவோ இருந்தால் அதை குறைந்த ரத்த அழுத்தம் (low blood pressure) என்றும் அளவீடு செய்யப்படுகிறது.
ரத்த அழுத்தம் அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக ஏற்படுகிறது. இது ஒல்லியானவர்கள், பருமனானவர்கள் என்ற பாரபட்சமின்றி வரக்கூடும். ஆனால் உலக அளவில் உடல் பருமன் கொண்டவர்கள் தான் அதிக அளவில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் எனஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
பெண்களுக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்?
பெண்களுக்கு ரத்த அழுத்தம் வந்தால் ஆரம்ப அறிகுறிகளை காட்டாது. அமைதியான அறிகுறியாகவே இருக்கும். ஆகவே, இதனை அமைதியான சமிக்ஞை என்று மருத்துவ உலகம் அழைக்கிறது. அதுவே அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும்போதுதான், சில அறிகுறிகள் தெரியும். உதாரணமாக, ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, கண்களுக்கு அருகில் சிவப்பு புள்ளிகள், தலைச்சுற்றல் மற்றும் தோலில் தடிப்புகள் ஆகிய அறிகுறிகள் தென்படும்.
ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு 21 முதல் 25 வயதுக்குள் 115.5 முதல் 70.5 வரை ரத்த அழுத்தம் இருக்க வேண்டும். அதே சமயம் 31 முதல் 35 வயதிற்குள் ரத்த அழுத்தம் குறையத் தொடங்குகிறது. அதாவது, இந்த வயதில், பெண்களின் ரத்த அழுத்தம் 110.5 மற்றும் 72.5க்கு குறைவாக இருக்க வேண்டும்.
ஆண்களுக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்?
பெண்களை விட ஆண்களுக்கு ரத்த அழுத்தும் சற்று அதிகமாகவே உள்ளது. 31 முதல் 35 வயது வரையிலான ஆண்களுக்கு 114.5 முதல் 75.5 வரை இருக்க வேண்டும். ஆனால், 40 வயதிற்கு பிறகு, ரத்த அழுத்த அளவீடு சிறிது அதிகரிக்கிறது. 61 முதல் 65 வயது வரை உள்ள ஆண்களின் ரத்த அழுத்தம் 143 முதல் 76.5. வரை இருக்கலாம்.
பெண்கள் மற்றும் ஆண்களின் வயதுக்கு ஏற்ப சரியான ரத்த அழுத்த அளவு:
வயது ஆண் பெண்
18-39 119/70 110/68
40-59 124/77 122/ 74
60 வயதுக்கு மேல் 133/69 139/ 68
உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது?
ரத்த அழுத்தம் அதிகரித்தால், இதயம் தொடர்பான பல ஆபத்துகள் தொடங்குகிறது. எனவே, ரத்த அழுத்தம் அதிகரித்தால், உடனடியாக வாழ்க்கை முறையை கவனித்து மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது உடலில் எந்தவித நோய் அறிகுறிகள் இல்லையென்றாலும் நம்முடைய வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி மிக முக்கிய அங்கமாக இருக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறவர்கள் கட்டாயம் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். தினசரி உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
சிகரெட், மது, பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக சர்க்கரை, அதிக உப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தம் துரத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ரத்த அழுத்தத்திற்காக எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்வதும் அவசியமாகும்.
No comments:
Post a Comment