இரவு நேரத்தில் எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, July 1, 2023

இரவு நேரத்தில் எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?

இரவு நேரத்தில் எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?
வாழைப்பழம், ஆப்பிள், கிவி, பூசணி வகை பழங்கள், நெல்லிக்காய், செர்ரி பழங்கள் போன்றவற்றை இரவு நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். 

இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பல நன்மைகளை அளிக்கும். ஆனால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது உடலை தொடர்ந்து புத்துணர்வாக வைத்திருக்கும். 

உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கு அடிப்படையானவை சத்தான உணவுகள். அத்தகைய உணவுகள் கூட நாம் சாப்பிடும் நேரத்தைப் பொறுத்து உடல்நலத்தில் நன்மை, தீமைகளை ஏற்படுத்தக்கூடும். 

 இரவு நேரத்தில் எளிதில் செரிக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். இல்லையெனில் செரிமானம், உடலின் வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சுரப்பு, ரத்த ஓட்டம், உடல் எடை, நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.

 எனவே சில உணவு வகைகளை, இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அவை குறித்து இங்கு பார்ப்போம். 

 கொழுப்பு உணவுகள்: 

எண்ணெய்யில் வறுத்த உணவுகள், சீஸ் மற்றும் துரித உணவுகளை இரவு நேரத்தில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவை சரியாக செரிக்காமல் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்சினைகளை உண்டாக்கும். 

 கார்பனேட்டட் பானங்கள் மற்றும் காபின்:

 கார்பனேட்டட் பானங்கள், காபி, டீ போன்றவற்றைக் குடிப்பதைத் தவிர்க்கலாம். இவை உடலின் ஹார்மோன் சுரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால், தூக்கம், வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் எடை போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்படும்.

 நீர்ச்சத்துள்ள உணவுகள்: 

 வெள்ளரி, தக்காளி, செலரி, கேரட், சவ்சவ், புடலங்காய், ஆரஞ்சு, திராட்சை மற்றும் பூசணி வகை பழங்களை இரவு நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இவற்றில் உள்ள நீர்ச்சத்து காரணமாக, சிறுநீர்ப்பை எளிதில் நிறைந்து தூங்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலையை உண்டாக்கும். 

மேலும், இவை உள் உறுப்புகளின் இயக்கம் மற்றும் உடலில் உள்ள செல்களை புத்துணர்வாக்குவதால், இரவு நேரத்தில் தன்னிச்சையாக ஏற்படும் தூக்கத்துக்கான சுழற்சியில் தடை ஏற்படும்.

 கார உணவு வகைகள்:

 இரவு நேரங்களில் அதிகமாக காரம் உள்ள உணவுகள், பாஸ்ட் புட் வகைகள், ரெடிமேட் உணவுகள் மற்றும் பச்சை மிளகாயை பாதி வெந்த நிலையில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். கார உணவுகளில் உள்ள 'காப்சைசின்' என்ற கலவை செரிமான பிரச்சினைகளை உண்டாக்குவதுடன், நெஞ்செரிச்சல் மற்றும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

 பழங்கள்

 வாழைப்பழம், ஆப்பிள், கிவி, பூசணி வகை பழங்கள், நெல்லிக்காய், செர்ரி பழங்கள் போன்றவற்றை இரவு நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பல நன்மைகளை அளிக்கும். 

ஆனால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது உடலை தொடர்ந்து புத்துணர்வாக வைத்திருக்கும். இதனால் சீரற்ற தூக்கம், செரிமான பிரச்சினை மற்றும் சளிக்கு வழிவகுக்கும். உடலில் உள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கும். சில பழங்களில் உள்ள அதிக அளவு கரையாத நார்ச்சத்து, செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் உடல் இயக்கத்தின் சுழற்சியில் தடை ஏற்படும்.

No comments:

Post a Comment