குளிர்ந்த நீர், வெந்நீர் எந்த நீரில் குளித்தால் உடலுக்கு நல்லது? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, July 1, 2023

குளிர்ந்த நீர், வெந்நீர் எந்த நீரில் குளித்தால் உடலுக்கு நல்லது?

குளிர்ந்த நீர், வெந்நீர் எந்த நீரில் குளித்தால் உடலுக்கு நல்லது?
கோடை காலத்தில் நாம் உல்லாசமான குளிர்ந்த நீர் குளியல் போடுவோம். மழை மற்றும் குளிர் காலங்களில் வெந்நீரில் குளிப்போம். சிலர் எந்த காலமாக இருந்தாலும் குளிர்ந்த நீரில் குளிப்பதையே விரும்புவர். சிலர் வெந்நீரையே எப்போதும் விரும்புவர். குளிர்ந்த நீர், வெந்நீர் ஆகிய இரண்டும் நமது உடலுக்கு வெவ்வேறு விதங்களில் நன்மை செய்கின்றன. அவை என்னென்ன எனத் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஏற்ற நீர் எது என்பதை அறியமுடியும். 

 குளிர்ந்த நீர் 

குளியல் குளிர்ந்த நீர் குளியல் உடலின் பிரவுன் கொழுப்பு உயிரிகளைக் கரைத்து உடல்எடை குறைப்புக்கு மறைமுகமாக உதவுகிறது. ஜிம் பயிற்சி செய்பவர்கள் பயிற்சி முடித்த பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் உஷ்ணம் தணிந்து சருமம் பொலிவுறும். சரும வறட்சியைத் தடுத்து சருமத்தின் நீர்த்தன்மையை அதிகரிக்க உதவும். 

 குளிர்ந்த நீரில் குளித்து முடித்தவுடன் புத்துணர்ச்சி கிடைப்பதுடன் ரத்தவோட்டம் அதிகரிக்கும். சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை அரிப்பு நீங்க குளிர்ந்த நீர் குளியல் உதவுகிறது. கோடை காலத்தில் வியர்வை மூலம் பரவும் கெட்ட பாக்டீரியாக்களை நீக்க குளிர்ந்த நீர் குளியல் உதவுகிறது.

 வெந்நீர் குளியல் 

 வெந்நீர் குளியல் சருமத் துளைகளைத் திறந்து அவற்றில் உள்ள அழுக்கை நீக்க உதவும். இருமல், சளி உள்ளிட்டவற்றைப் போக்க காலாகாலமாக நீராவி குளியல் பயன்படுகிறது. சருமத்தில் படிந்துள்ள அதீத எண்ணெய் பிசுக்கை நீக்க உதவுகிறது. சருமத்தை மசாஜ் செய்து தூக்கத்தைத் தூண்டும்.

 இரவு வெந்நீர் குளியல் இன்ஸோம்னியா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் தூக்கம் வர உதவும். இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதியோருக்கு வெந்நீர் குளியல் இதயத்தைப் பாதுகாக்க ஏற்றது. 80 வயது கடந்த நோய்வாய்ப்பட்ட முதியோருக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது சிறந்தது. வெந்நீர் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. 

முதியோர் படுக்கையில் பல மணிநேரம் படுத்திருப்பதால் முதுகுப் பகுதியில் புண் ஏற்படாமல் தடுக்க வெந்நீர் உதவுகிறது. தசை வலி மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில் வெந்நீர் ஊற்றினால் தசைப்பிடிப்பு நீங்கி ரத்தவோட்டம் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment