தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ல் உள்ளூர் விடுமுறை - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, July 27, 2023

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ல் உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ல் உள்ளூர் விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 பனிமய மாதா பேராலயத்தின் தேர் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

 உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி புனித பனிமய மாதா பேராலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி பனிமய மாதா பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழா மற்றும் 16வது தங்க தேர் பவனி நடைபெறவுள்ளதால, உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். 

 எனினும் அத்தியாவசியப் பணியாளா்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment