இந்து சமய அறநிலையத்துறையில் ரூ 48,700 ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, July 21, 2023

இந்து சமய அறநிலையத்துறையில் ரூ 48,700 ஊதியத்தில் வேலை வாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் ரூ 48,700 ஊதியத்தில் வேலை வாய்ப்பு
துாத்துக்குடி மாவட்டம், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலிலில் காலியாக உள்ள பல்வேறு மேற்பட்ட பணிகளுக்கு, இறை நம்பிக்கை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 நிர்வாகம் :

 அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில்,

 குலசேகரன்பட்டினம்

 தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை

 (TNHRCE) 

 மேலாண்மை

மாநில அரசு

 பணி விவரம்

 அர்ச்சகர்(உபகோயில்) 

 உதவி அர்ச்சகர்(முதன்மை கோயில்)

 நாதஸ்வரம் (முதன்மை, உப கோயில்)

 தவில் (முதன்மை, உப கோயில்)

 மடப்பள்ளி/பரிசாரகர் (உப கோயில்)

 ஒதுவார் (முதன்மை, உப கோயில்)

 பரிசாரகர் (முதன்மை, உப கோயில்)

 இரவுக் காவலர் (முதன்மை, உப கோயில்)

 பகல் காவலர் (முதன்மை, உப கோயில்)

 மின் பணியாளர் (முதன்மை, உப கோயில்)

 திருவலகு (முதன்மை, உப கோயில்)

 அலுவலக உதவியாளர் (முதன்மை, உப கோயில்)

 விண்ணப்பிக்கும் முறை: 

 அஞ்சல் வழி

 விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.08.2023

 பணியிடங்கள் எண்ணிக்கை:

 26 

 பணியிட விவரங்கள் குறித்த முழு விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.

 கல்வித்தகுதி 

 அறிவிக்கப்பட்டு உள்ள அனைத்து பணிக்கும், தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

 அர்ச்சகர், உதவி அர்ச்சகர் பணிக்கு, சமய நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப் பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 நாதஸ்வரம், தவில் பணிக்கு, நாதஸ்வரம், தவில் வாசிப்பில் சான்றிதல் பயிற்சி வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.

 மடப்பள்ளி பணிக்கு திருக்கோவில் பழக்க வழக்கங்களை பின்பற்றி பிரசாதம் மற்றும் நைவேத்தியம் தயாரிக்கும் முறை குறித்து அறிந்திருக்க வேண்டும். 

 திருக்கோயில் பூஜை மற்றும் சடங்குகள் போன்ற வழக்கங்களை அறிந்திருக்க வேண்டும்.

 ஓதுவார் பயிற்சி வகுப்பு மூன்றாண்டு நிறைவு செய்வதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 இரவு காவலர், பகல் காவலர், திருவலகு ஆகியவற்றிற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

 மின் பணியாளர் பணிக்கு ஐ.டி.ஐ. அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 அலுவலக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை விண்ணப்பதாரர்கள் கொண்டிருக்க வேண்டும். 

 இறை நம்பிக்கை உடையவராகவும், இந்து மதத்தை சேர்ந்தவராகவும் கொண்டிருத்தல் வேண்டும். 

 குறைந்தபட்ச தகுதிகளாக, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

 பணிகளுக்கு தொடர்புடைய துறையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 சான்றிதழ் பெற்றவர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

 ஊதிய விவரம்

 அர்ச்சகர்(உபகோயில்) - ரூ.11,600- ரூ.36,800

 உதவி அர்ச்சகர்(முதன்மை கோயில்) - ரூ.13,200 -ரூ.41,800

 நாதஸ்வரம் (முதன்மை, உப கோயில்) - ரூ.15,300 -ரூ.41,800 

 தவில் (முதன்மை, உப கோயில்) - ரூ.15,300 -ரூ.48,700 

 மடப்பள்ளி/பரிசாரகர் (உப கோயில்) - ரூ.13,200 -ரூ.41,800

 ஒதுவார் (முதன்மை, உப கோயில்) - ரூ.12,600 -ரூ.39,900

 பரிசாரகர் (முதன்மை, உப கோயில்) - ரூ.12,600 -ரூ.39,900

 இரவுக் காவலர் (முதன்மை, உப கோயில்) - ரூ.11,600 -ரூ.36,800

 பகல் காவலர் (முதன்மை, உப கோயில்) - ரூ.11,600 -ரூ.36,800

 மின் பணியாளர் (முதன்மை, உப கோயில்) - ரூ.12,600 -ரூ.39,900

 திருவலகு (முதன்மை, உப கோயில்) - ரூ.10,000 -ரூ.31,500 

 அலுவலக உதவியாளர் (முதன்மை, உப கோயில்) - ரூ.12,600 -ரூ.39,900 

 வயது வரம்பு 

 விண்ணப்பதாரர் வயதானது, 01.07.2023 அன்று 18 வயதை பூர்த்தி செய்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் வேண்டும்.

 வயது வரம்பு சலுகை குறித்த விவரங்களை அறிய, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

 பணியிடங்களின் எண்ணிக்கை, பதவி உயர்வு, பணி ஓய்வு உள்ளிட்ட நிர்வாக காரணங்களுக்காக மாறுதலுக்கு உட்பட்டதாகும். 

 நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில், நேரில் சென்று கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

 ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

 விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை www.tnhrce.gov.in அல்லது திருக்கோயில் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். 

 கூடுதல் விவரங்களை கோயில் அலுவலகத்தில், அலுவலக நாட்களில் நேரடியாக கேட்டு தெரிந்துக் கொள்ளாலம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செயல் அலுவலர், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் வட்டம், துாத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 11.08.2023 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்று கொள்ளப்படும். 

 அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

 விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றுகள் மற்றும் பிற ஆவணங்களுக்கு சான்றிட்ட நகல் மட்டுமே அனுப்ப வேண்டும்.

 அசல் சான்றிதழை நேர்காணலின் போது கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

 கேட்கப்பட்ட சான்றிதழ்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படாது.

 முதலில் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

 home page- ல் இடம்பெறும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ற லிங்க்கை கிளிக் செய்யவும். 

 புதிதாக தோன்றிய பக்கத்தில், பணி குறித்தான வேலைவாய்ப்பை விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

அடுத்ததாக விண்ணப்ப அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

 https://hrce.tn.gov.in/hrcehome/index.php

No comments:

Post a Comment