ஆகஸ்ட் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, July 22, 2023

ஆகஸ்ட் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஆகஸ்ட் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
'வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, ஆக., 3ல், நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகம், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், சங்ககாலத்தில் புகழ்பெற்ற கடை ஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி, 17, 18 ஆகிய நாட்களில், அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. 

அதன்படி, நடப்பாண்டில் வரும், ஆக., 2, 3 ஆகிய நாட்களில், அரசு சார்பில், வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. அரசின் பல்துறை பணிவிளக்க கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், வல்வில் ஓரி அரங்கில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் வாசலுார்பட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி ஆகியவை நடக்கிறது.

 இவ்விழாவிற்காக, ஆக., 3ல், நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில், ஆக., 12ல், பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

 ஆக., 3 ல், மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த விடுமுறையானது வங்கிகளுக்கு பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment