* சிட்ரிக் ஆசிட் ஒரு சிட்டிகை குக்கர் தண்ணீரில் தூவி விட்டால் போதும் குக்கரின் உட்பக்கம் பளிச்சிடும்.
* குக்கரில் இரண்டு மூன்று பொருட்களை வேக விடும் போது மேல் தட்டில் பருப்பு வகைகளை வைக்கக் கூடாது. பருப்பு பொங்கி ஆவி வரும் துவாரத்தை அடைத்துக் கொண்டால் குக்கர் வெடித்து விடும் அபாயமும் உண்டு.
*உருளைக் கிழங்கை வெங்காயத்துடன் போட்டு வைக்கக் கூடாது. சீக்கிரம் கெட்டுவிடும்.
*நெய் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் ஒரு துண்டு வெல்லத்தைப் போட்டு வைக்க வேண்டும்.
*கேக், பிஸ்கெட்களை ஒரே பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் பிஸ்கெட் நமத்து விடும். ஆகவே தனித்தனி பாத்திரங்களில் பத்திரப்படுத்த வேண்டும்.
*முட்டை முப்பது நாட்கள் கெடாமல் இருக்க அதன் மேல் சமையல் எண்ணெயை பிரஷ்ஷால் தடவி வையுங்கள்.
* பார்லியில் சுண்டல் செய்யும்போது அதனுடன் ஸ்வீட் கார்ன் போன்று இனிப்பானதை சேர்த்து செய்ய சுவை அதிகரிக்கும்.
* பருப்பு வடை மீந்து விட்டால், மறு நாள் வடைகறி செய்யலாம். அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வெந்த காய்களுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்க உசிலி சுவையாக இருக்கும்.
* கார சுண்டலுக்கு இஞ்சி, பெருங்காயம் சேர்த்தும், இனிப்பு சுண்டலுக்கு சுக்கு சேர்த்தும் செய்ய வாயு பிரச்னை
ஏற்படாது.
* சிறு குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் பானிபூரிகளை கொண்டு தனி தட்டில் வைத்து தயாரித்த சுண்டல், ஓமப்பொடி, கொத்தமல்லி தழை என அலங்கரித்து கொடுக்க மீதம் வெக்காமல் சாப்பிட்டு விடுவர்.
* கிழங்குகளை வேகவைக்கும் போது உப்பு சேர்த்தால் சரியாக வேகாது. வெந்தபின்பே உப்பு சேர்க்க வேண்டும்.
* உருளைக்கிழங்கை தோல் சீவாமல்,
கழுவிவிட்டு சமைக்க வேண்டும். அதில் உள்ள வாய்வுக்கு தோலே மருந்து ஆகிறது.
* உருளைக்கிழங்கை மணலில் வைத்தால் கெடாமல் இருக்கும்.
* கருணை, சேனைக் கிழங்குகளை வாங்கி ஒரு வாரம் கழித்து சமைத்தால் தொண்டை நாக்கில் அரிக்காது.
* உப்பு ஜாடியில் ஈரம் கசிகிறதா? பிடி அரிசியை உப்புடன் கலந்து வைத்தால் ஈரம் போயே போச்சு.
* பாதுஷா ஸ்வீட் செய்யும் போது மாவில் கொஞ்சம் தயிர் விட்டுப் பிசைந்தால் பாதுஷா மிருதுவாயிருக்கும்.
* கடலை மாவு, அரிசி மாவு இல்லாவிட்டால் கோதுமை மாவிலும் பஜ்ஜி செய்யலாம்.
*சட்னியில் உப்பு அதிகமாகி விட்டால் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி அதில் போட்டால் உப்பை அது உறிஞ்சி விடும்.
* பாயசம் நீர்த்து விட்டால், பருப்பு பாயசமோ, ஜவ்வரிசி பாயசமோ எதுவாக இருந்தாலும் அதில் இரண்டு டீஸ்பூன் சோள மாவு கலந்து கிளறி
5 நிமிடங்கள் கொதிக்க விட்டால் போதும் பாயசம் கெட்டியாகிவிடும்.
* எலுமிச்சை சாதம் தயாரிக்கும்போது சிறிதளவு வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கலந்து கொண்டால் சாதம் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
* இட்லி மாவு குறைவாக இருந்தால் ரவையை வறுத்து கலந்து சிறிது நேரம் ஊறியதும், பிறகு தோசை வார்த்தால் தோசை மொறுமொறுவென்றுசுவையாக இருக்கும்.
* தோசைக்கு மாவு கரைக்கும்போது சிறிதளவு ஜவ்வரிசி கலந்து அரைத்து, தோசை வார்த்தால் சுவையான
மெல்லிய தோசை வரும்.
* பருப்பு பொடி தயாரிக்கும்போது, இரண்டு ஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாக இருக்கும். ஜீரணத்துக்கும் நல்லது.
* மணத்தக்காளிக் கீரையை வதக்கி, கடலைபருப்பை வறுத்து அதையும், மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைத்தால் சுவையாக இருக்கும்.
* கோவக்காயை நறுக்கி சிறிய கிண்ணத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் எடுத்து பொரியல் செய்தால் எண்ணெய் அதிகம் விட வேண்டாம்.
No comments:
Post a Comment