பயனுள்ள சமையலறைக் குறிப்புகள் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, June 18, 2023

பயனுள்ள சமையலறைக் குறிப்புகள்

பயனுள்ள சமையலறைக் குறிப்புகள்
காலிஃப்ளவர், முள்ளங்கி, டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவற்றை வாங்கி சில நாட்களுக்குப் பின் சமைத்தால், அதிலிருந்து ஒருவித வாடை வரும். இதனைத் தவிர்க்க, சிறிது எலுமிச்சைச் சாற்றையும், சர்க்கரையையும் கலந்து சமைக்க வேண்டும். அவ்வாறு சமைத்தால், எந்தவித வாடையும் இருக்காது.

 *காலிஃப்ளவரை, சமைப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன், இலைகளை நீக்கிவிட்டு, ஒரு பிடி உப்பு கலந்த நீரில், குடை மாதிரி அமிழ்ந்திருக்கும்படி வைக்க வேண்டும். இப்படி செய்தால், கண்ணுக்கு எளிதில் தெரியாத பூச்சிகள் அனைத்தும் நீரில் மிதந்து வந்துவடும்.

 * தோசை சுடும்போது, தோசைக்கல்லில் ஒட்டிக் கொண்டால், வெங்காயத்தை பாதியாக வெட்டி, தோசைக்கல்லில் ஒவ்வொரு தோசை சுடும்போதும் தேய்த்தால், சுலபமாக தோசை வார்ப்பதற்கு வரும். 

 *பூரிக்கு மாவு பிசையும்போது, சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும். 

 * சப்பாத்தியை அடுப்பிலிருந்து எடுத்தவுடன் ஓட்டை உள்ள தட்டில் போட்டுவிட்டால் அடியில் வைத்த சப்பாத்திகள் ஆவியினால் தண்ணீர் விடுவதை தவிர்க்கலாம். 

 * பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு கப் கோதுமைக்கு ஒரு ஸ்பூன் ரவை என்ற விகிதத்தில் கலந்து பிசைந்தால் பூரி பந்துபோல் நன்கு உப்பி வரும்.

 * மோர்க்குழம்பு செய்யும்போது மிளகாய் வற்றலை வறுத்து அரைத்து சேர்த்தால் குழம்பு வெள்ளையாக இருக்கும். 

 * தேங்காய்ச் சட்னிக்கு அரைக்கும்போது 1 பல் பூண்டு, சிறு துண்டு இஞ்சி, சிறிது புளி சேர்த்து அரைத்தால் சுவையும், மணமும் அதிகமாகும்.

 * பொங்கல் செய்கையில் தண்ணீருடன் நெய் அல்லது டால்டா சேர்த்தால் பொங்கல் பாத்திரத்தில் ஒட்டாது.

 * பகளாபாத் தயாரிக்கும்போது ஒரு கப் அரிசிக்கு ஒரு டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசி வீதம் சேர்த்தால் குழைவாய் இருக்கும்.

 * பாலில் உறை ஊற்றும்போது அதனுடன் அரிசிக்கஞ்சியை சேர்த்தால் தயிர் கெட்டியாக கிடைக்கும்.

 * பொரிப்பதற்கு வைத்திருக்கும் எண்ணெயில் தண்ணீர் கலந்திருந்தால் ஒரு துண்டு வாழை இலையை போட்டு வைத்தால் எண்ணெய் வெடிப்பது குறையும்.

 * தேங்காய்சாதம், எலுமிச்சை சாதம் தயாரிக்கும்போது பொட்டுக்கடலையை நன்கு எண்ணெயில் வறுத்துக் கொட்டினால் சுவை அள்ளும்.-

 * அரைத்த தேங்காய் சட்னி மீதமாகி ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கும்போது, சிறிதளவு வெந்நீர் கலந்து பயன்படுத்தினால் புதிதாக அரைத்தது போலவே இருக்கும். 

 * பச்சைப் பட்டாணி சீசன் முடிகிற சமயத்தில் அதிகளவில் பட்டாணியை வாங்கி தோலை உரித்தெடுத்து சிறுசிறு பாலிதீன் கவர்களில் 250 கிராம் அளவில் ஃப்ரிட்ஜ் ஃப்ரீஸரில் வைத்துவிடுவோம். தேவைப்படும்போது ஒரு பாக்கெட்டை எடுத்து சிறிது நேரம் வெளியில் வைத்திருந்தால் போதும். சமையலுக்கு தேவையான ஃபிரஷ் பட்டாணி தயார்.

No comments:

Post a Comment