தயிர், மோர்... இரண்டில் எது பெஸ்ட்? எப்போது எதை சாப்பிட வேண்டும்? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, June 3, 2023

தயிர், மோர்... இரண்டில் எது பெஸ்ட்? எப்போது எதை சாப்பிட வேண்டும்?

தயிர், மோர்... இரண்டில் எது பெஸ்ட்? எப்போது எதை சாப்பிட வேண்டும்?
தயிர், மோர் இரண்டுமே ஆரோக்கியமானது தான். தயிரில் உள்ள புரோ-பயோடிக் பண்புகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல மோர் உடல்சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

 ஆனால் பேலன்ஸ்டு டயட்டில் இருப்பவர்கள் தயிர் எடுத்துக் கொள்வது நல்லதா, மோர் சாப்பிடுவது நல்லதா என்ற குழப்பங்கள் நிறைய பேருக்கு உண்டு. இரண்டில் எது சிறந்தது என்பதற்கான காரணங்களை பற்றி இங்கே பார்ப்போம். 

 தயிர் மற்றும் மோர் இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அதனால் இதில் ஒன்றை தேர்வு தேர்வு செய்யும்போது நம்முடைய உடல்வாகையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 

மோர் உடல்சூட்டை தணிக்கும். ஆனால் தயிரில் உள்ள மூலக்கூறுகள் உடைவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். அதனால் டயட்டில் இருப்பவர்கள் குறிப்பாக எடை குறைக்க, நீரிழிவு, கல்லீரல், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் தயிரை விட மோர் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. 

மோரை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டியதற்கான காரணத்தை பற்றி இங்கு பார்ப்போம். ​

ஜீரண ஆற்றலை மேம்படுத்தும் மோர்

  தயிர் ஜீரணமாவதற்கு நீ்ண்ட நேரம் எடுக்கும். அதனால் தான் இரவு நேரங்களில தயிர் சாப்பிடக்கூடாது என்று முன்னோர்கள் சொல்வார்கள். ஆனால் மோரில் மிகவும் அடர்த்தி குறைவு. நீர்த்தன்மை கொண்டது என்பதால் எளிதில் ஜீரணமாகும்.

 அதோடு சரியான நேரத்துக்கு பசியைத் தூண்டும். அதனால் அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லையால் அவதிப்படுகிறவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு மோரை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ​

எடை குறைய மோர்

  எந்தவிதமான அஜீரணக் கோளாறும் வாயுத் தொல்லை, வயிறு மந்தம் போன்ற பிரச்சினை இல்லாதலர்கள் உங்களுடைய உடல் தேறாமலே இருந்தால் எடையை கூட்டுவதற்கு தயிரை சாப்பிடலாம். ஆனால் நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால் தயிருக்கு பதிலாக மோர் எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் மிக மிகக் குறைவான அளவு மட்டுமே தயிர் எடுத்து அதில் நிறைய தண்ணீர் சேர்த்து குடியுங்கள். முடிந்தவரையில் தயிரை தவிர்ப்பது நல்லது.

 ​உடலை லேசாக வைத்திருக்க மோர்

  தயிர் உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். ஆனால் மோர் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கச் செய்யும். மோரும் தயிரிலிருந்து தானே வருகிறது பிறகு எப்படி இரண்டும் வேறு வேறு தன்மை கொண்டிருக்கிறது என்று கேட்கலாம். 

 தயிரிலிருந்து மோராக மாற்றப்படும் செயல்முறையின் போது அது குளிர்ச்சியடைகிறது. அதனால் மோர் குடிக்கும்போது நம்முடைய உடல மிகவும் இலகுவாக மாறுகிறது. 

 தயிர் சாப்பிட சிறந்த நேரம் எது? 

 தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது.அந்த நேரத்தில் நம்முடைய ஜீரண மண்டலம் மிக மெதுவாக இருக்கும். அதனால் ஜீரணமாவது கடினம். அப்படியே தயிர் சாப்பிட வேண்டுமென்றால் அதற்கு சரியான நேரம் மதிய வேளை தான். மதிய நேரத்தில் நம்முடைய ஜீரண மண்டலம் அதி வேகத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும். அதனால் அந்த நேரத்தில் தயிர் எடுத்துக் கொள்வது சிறந்தது.

ஆனால் மோர் எல்லா நேரத்திலும் எடுத்துக் கொள்ள முடியும். இது ஜீரணத்தை துரிதப்படுத்துவதால் குடல் சுத்தமாக இருக்கும். உடலில் கழிவுகள் தேங்காமல் தடுப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.

No comments:

Post a Comment