இளநரை,முடி உதிர்தல், வழுக்கை போன்றவற்றை தடுக்கும் எளிய இயற்கை வழிகள் - Minnalseithi

Latest

Search This Blog

Monday, June 19, 2023

இளநரை,முடி உதிர்தல், வழுக்கை போன்றவற்றை தடுக்கும் எளிய இயற்கை வழிகள்

இளநரை,முடி உதிர்தல், வழுக்கை போன்றவற்றை தடுக்கும் எளிய இயற்கை வழிகள் இஞ்சி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெயை தலையில் தேய்த்து வர முடி செழித்து வளரும். 

 அவுரி இலை அல்லது அவுரி பொடியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர இளநரை வருவதை தடுக்கலாம்.

 நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தேங்காய் எண்ணெயில் கருப்பாக மாறும் வரை வதக்கி எடுத்து வைத்துக் கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்து வர இளநரை மற்றும் முடி உதிர்தல் தடுக்கப்படும்.

 இளநரை முடி உதிர்தல் மற்றும் வழுக்கைக்கு வெங்காயச் சாறு பெரிதும் உதவுகிறது.

 கருமையான மற்றும் பளபளப்பான முடியை பெற தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்துவர விரைவில் இளநரை மாறும்.

 வேகவைத்த கொய்யா இலை தண்ணீரை தலையில் தடவி மசாஜ் செய்து வர இளநரையை தடுக்கலாம். 

 முசுமுசுக்கை இலையின் சாறு மற்றும் நல்லெண்ணெயை சம அளவு சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.

 அன்றாடம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையை சேர்த்து வந்தால் இளநரை மறையும்.

 இளநரையை மாற்றும் சக்தி பசுவெண்ணெய்க்கு உண்டு. அதனால் இதனுடன் கறிவேப்பிலைப் பொடியை சேர்த்து சாப்பிட இளநரை மறையும்.

 தண்ணீரில் உலர்ந்த நெல்லிக்காயை இரவு ஊறவைத்து, அந்தத்தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை அரைத்து, காய்ச்சி தினமும் தேய்த்து வர இளநரை மறையும்.

 கறிவேப்பிலையை நன்றாக அரைத்து தினமும் வெறும் வயிற்றில் ஒரு கவளம் சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் இளநரையைப் போக்கலாம். 

 நரைமுடி கருப்பாக மாற முளைக்கீரை உதவும். எனவே முளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

 செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, அரை மணிநேரம் ஊற வைத்து குளித்து வந்தால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும், இதனை வாரத்துக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment