தேங்காயையும், தேங்காய் எண்ணெயையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாமா? எந்த அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, June 4, 2023

தேங்காயையும், தேங்காய் எண்ணெயையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாமா? எந்த அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்?

தேங்காயையும், தேங்காய் எண்ணெயையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாமா? எந்த அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்?
தேங்காயோ, தேங்காய் எண்ணெயோ சேர்த்துக்கொண்டால் உடலில் கொலஸ்ட்ரால் சேரும், கெட்ட கொழுப்பு சேரும் என்றெல்லாம் பிரசாரங்கள் செய்யப்பட்டதால் பலரும் பயந்து, தேங்காய் உபயோகத்தையே தவிர்க்கத் தொடங்கினர்.

 தேங்காய் எண்ணெயில் 'மீடியம் செயின் ட்ரைகிளிசரைடு' என்ற கொழுப்புச்சத்து இருக்கிறது. அது உடலுக்கு, குறிப்பாக மூளைக்கு மிகவும் அவசியம்.

 தேங்காயிலும், தேங்காய் எண்ணெயிலும் மருத்துவ குணங்கள் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை சமையலில் பயன்படுத்தினார்கள். 

 தேங்காயோ, தேங்காய் எண்ணெயோ சேர்த்துக்கொண்டால் உடலில் கொலஸ்ட்ரால் சேரும், கெட்ட கொழுப்பு சேரும் என்றெல்லாம் பிரசாரங்கள் செய்யப்பட்டதால் பலரும் பயந்து, தேங்காய் உபயோகத்தையே தவிர்க்கத் தொடங்கினர்.

 அதேநேரம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்பவே தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை உபயோகிக்க வேண்டும். அந்த வகையில் தினமும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. 

எல்லோருக்கும் கொழுப்புச்சத்து என்பது அவசியம். எனவே மற்ற கொழுப்புச்சத்துகளைத் தவிர்த்துவிட்டு, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். வெண்ணெயில் உள்ளது போல தேங்காய் எண்ணெயில் உள்ளது கெட்ட கொழுப்பு அல்ல. ஃப்ரெஷ் தேங்காயில் நிறைய நார்ச்சத்து உள்ளது.
அது குடலுக்கு மிகவும் நல்லது.

 மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம். அந்த வகையில் தேங்காய் நல்லது. குடல் புற்றுநோய் வராமலும் காக்கும். நான்குபேர் கொண்ட குடும்பத்தில் வாரத்துக்கு இரண்டு தேங்காய் (மீடியம் சைஸ்) உபயோகிப்பதில் தவறில்லை.

No comments:

Post a Comment