காலை பிரேக் பாஸ்ட்டுக்கு ஹெல்த்தியான உணவு:உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சத்துக்கள் நிறைந்த ராகி ஸ்மூத்தி ரெசிபி - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, June 22, 2023

காலை பிரேக் பாஸ்ட்டுக்கு ஹெல்த்தியான உணவு:உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சத்துக்கள் நிறைந்த ராகி ஸ்மூத்தி ரெசிபி

காலையில் எழுந்து அரக்கப் பறக்க பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்துக்கு தயாராகி செல்லவே பலருக்கும் சரிவர நேரம் இருப்பதில்லை. இதில், 'டைம் இல்லை' எனக்கூறி காலை சாப்பாட்டைக்கூட தவிர்த்து விட்டு செல்வோரும் உண்டு. இதனால், நாளடைவில் இவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது. 

எனவே, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சத்துக்கள் நிறைந்த ராகி ஸ்மூத்தி ரெசிபி இதோ...

 தேவையானப் பொருட்கள்:

 ராகி மாவு : 1 1/2 டேபிள் ஸ்பூன்

பட்டை : 1 

 பாதாம் பருப்பு : 8 

 ஆப்பிள் : 1 

 சியா விதைகள் : 1 டேபிள் ஸ்பூன் 

 ஆளி விதைகள் : 1 டேபிள் ஸ்பூன்

  பேரீச்சம்பழம் : 2 

 எப்படிச் செய்வது?

 கால் கப் தண்ணீரில் ராகி மாவை கட்டிகள் இல்லாதவாறு நன்றாகக் கலக்கவும்.

 முளைக்கட்டிய ராகி மாவு என்றால் சத்துக்கள் இன்னும் கூடுதலாக இருக்கக்கூடும். 

அடுப்பில் கடாயை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி ராகி கலவை, பட்டை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

 அடுப்பை குறைவான தணலில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். 

ஒரு சில நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து ராகி கலவையை ஆற விடவும்.

 ஒரு மிக்சி ஜார் அல்லது பிளெண்டரில் ராகி கலவையுடன், முதல் நாள் இரவு ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், நறுக்கிய ஆப்பிள், ஆளி விதைகள், சியா விதைகள், பேரீச்சம்பழம் மற்றும் கால் கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும். 

இப்போது சுவையான, ஹெல்த்தியான ராகி ஸ்மூத்தி ரெடி.

No comments:

Post a Comment