பால் ஆடை சாப்பிட மட்டுமல்ல, சருமத்தை பாதுகாக்கவும் அழகு சிகிச்சை முறையி பயன்படுத்தப்படுகிறது.
சருமத்திற்கு ஈரப்பதத்தையும் சருமம் வறண்டு போவதை தடுக்கவும் உதவுகிறது.
பாலாடையை எடுத்து முகத்தில் தடவும்போது சருமம் மிருதுவாகும். இந்த பாலாடைக்கட்டியில் புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. ஆண், பெண் ஆகிய இருபாலருமே பாலாடை அழகு சிகிச்சை செய்துகொள்ளலாம்.
பாலாடை மூலம் முகத்தின் அழகைப் பராமரிப்பது எப்படி?
பால் ஆடை வறட்சியால் ஏற்படும் சிவத்தல் மற்றும் நமைச்சலை சமாளிக்க உதவுகிறது. தோல் சுருக்கங்கள் உள்ளிட்ட வயதாவதன் அறிகுறிகளை தாமதப்படுத்தவும் உதவுகிறது.
முகத்தை பாலாடைக்கட்டி மூலம் மசாஜ் செய்வது இயற்கையான ஈரப்பதமூட்டும் பண்புகளை வழங்கும். உங்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்யும்.
ஒரு டீ ஸ்பூன் பாலாடைக்கட்டியை எடுத்து 15-20 நிமிடங்கள் முகத்தில் போட்டு மசாஜ் செய்யுங்கள். பிறகு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளுங்கள். பாலாடைக்கட்டியில் லாக்டிக் அமிலம் நிறைந்து காணப்படுகிறது. இது சருமத்தில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுகிறது.
பதின்பருவ வயதில் முகத்தில் பருக்கள் உருவாகும் அபாயம் குறைகிறது. இது இறந்த சரும செல்களை அகற்றி, ஈரத்தன்மையை அதிகரித்து முகத்தை உடனடியாக பிரகாசமாகும்.
அதிகாலை வேளையில் பாலாடைக்கட்டியை கற்றாழை அல்லது முல்தானி மெட்டியுடன் கலந்தும் முகத்தில் தடவலாம். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விடவேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளலாம். இது சருமத்துக்கு இயற்கையான பளபளப்பைத் தரும்.
No comments:
Post a Comment