சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் வாழைப்பூ: வாரம் இருமுறை வாழைப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, June 13, 2023

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் வாழைப்பூ: வாரம் இருமுறை வாழைப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் வாழைப்பூ: வாரம் இருமுறை வாழைப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
வாழைப்பூ ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியாததால், அதனை சமைப்பது இல்லை.

 எனவே, வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம். 

 வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால், ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும். 

 ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் ரத்தமானது அதிக ஆக்ஸிஜனை உட்கிரகித்து தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

 சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால், ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. மேலும், கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கிறது. 

 வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும். வாய்ப்புண், வாய் துர்நாற்றத்தை நீக்கும் ஆற்றலும் வாழைப் பூவிற்கு உண்டு. 

 மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள் மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

 வாழைப் பூவிற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுள்ளது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும். 

 பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மாதவிடாய் பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

 வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. 

 உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம். இதில் கொழுப்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

No comments:

Post a Comment