மூன்றாவது மிக முக்கிய காரணம் உடல் உழைப்பு இல்லாமை மற்றும் மோசமான வாழ்க்கைமுறை .
சிலர் அதிகமாக மருந்து , மாத்திரைகளை உட்கொள்கிறார்கள் எனில் அதன் பக்கவிளைவுகள் காரணமாகவும் மாரடைப்பை எதிர்கொள்கின்றனர்.
மாரடைப்பை தவிர்க்க என்ன வழிகள் :
உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, , நீரிழிவு நோய் இருப்பின் அவற்றையெல்லாம் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அதற்காக தொடர்ச்சியாக மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெற வேண்டும்.
அப்படி ஒருவேளை மேற்கூறிய பிரச்னைகள் எதுவுமே இல்லை எனில் இந்த விஷயங்களை கடைபிடியுங்கள்.
தினமும் 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.
குறிப்பாக இதயத்தின் இயக்கத்தை சீராக்கும் சைக்கிளிங், நீச்சல் , ஓட்டப்பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள்.
தொடர்ச்சியாக வேலையில் மட்டும் கவனம் செலுத்தினாலும் அவ்வப்போது குடும்பத்தினரிடமும் பேசுங்கள்.
அவர்களுடன் வெளியே செல்லுங்கள். பிடித்த விஷயங்களை செய்யுங்கள். டிவி பார்ப்பது , செல்ஃபோன் பார்ப்பது உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வாகாது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக தவிருங்கள். ஒருநாளைக்கு ஒன்று என மாற்றிக்கொண்டாலும் அது நிவாரணம் கிடையாது.
உங்கள் மகிழ்ச்சிக்கு எப்போதும் உத்திரவாதம் கொடுங்கள்.
தேவையில்லாமல் பிர்ச்னைகளை மனதில் குப்பைகளாக சேர்த்து வைக்காதீர்கள்.
தினமும் 200-250 கிராம் காய்கறி, பழங்களை சாப்பிடுங்கள்.
உப்பு அதிகம் சேர்க்காமல் குறைத்துக்கொள்ளுங்கள்.
குளிர்பானங்களை முற்றிலும் தவிருங்கள்.
இவற்றையெல்லாம் முறையாக, சரியாக கடைப்பிடிக்கிறீர்கள் எனில் 95-98 சதவீதம் உங்களுக்கு எந்த பாதிப்பும் வர வாய்ப்பு இல்லை.
No comments:
Post a Comment