வயிற்றுப் போக்கை சரி செய்ய உதவும் 5 வீட்டு வைத்தியங்கள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, June 8, 2023

வயிற்றுப் போக்கை சரி செய்ய உதவும் 5 வீட்டு வைத்தியங்கள்..!

வயிற்றுப் போக்கை சரி செய்ய உதவும் 5 வீட்டு வைத்தியங்கள்..!
வயிற்றுப்போக்கு ஏற்பட பொதுவான காரணங்களாக சுகாதாரமற்ற உணவை உண்பது அல்லது நம் உடல் ஏற்காத உணவுகளை உட்கொள்வது இருக்கின்றன.

 வாழைக்காய்

வயிற்றுப்போக்கு மற்றும் ஸ்டொமக் அப்சட் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க வாழைக்காய் பரிந்துரைக்கப்படுகிறது. வாழைக்காயில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் பாதிக்கப்பட்ட செரிமானத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவுகிறது. எனினும் நீங்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தால் வாழைக்காயை பச்சையாக அப்படியே சாப்பிட வேண்டாம். அவற்றை பிரஷர் குக்கரில் தண்ணீரில் வைத்து வேகவைத்து கொள்ளுங்கள். பின் தோலுரிக்கப்பட்ட வாழைக்காய் பீஸ்களில் உப்பு மற்றும் பிளாக் பேப்பர் சேர்த்து சாப்பிடலாம்.

 இசப்கோல் மற்றும் தயிர்: 

இசப்கோல் (Isabgol) சைலியம் உமி எனவும் குறிப்பிடப்படுகிறது. வயிற்றுப்போக்கின் போது தயிர் அல்லது யோகர்ட் சாப்பிடுவது நல்லது. தயிர் ஒரு புரோபயாடிக், இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதேநேரம் இசப்கோல் இயற்கையான ஹைட்ரோஸ்கோபிக் ஆகும். இது கூடுதல் நீரை உறிஞ்சி மலத்தை திடமாக்க உதவுகிறது. ஒரு கப் தயிரில் ஒரு டீஸ்பூன் இசப்கோல் சேர்த்து இரண்டையும் நன்கு மிக்ஸ் செய்து சாப்பிடலாம். 

 தேன் மற்றும் இஞ்சி : 

இஞ்சியில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் உள்ளன, இவை வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வை தணிக்க உதவுகின்றன. மேலும் இஞ்சியின் ஹீலிங் தன்மை வயிற்றுப்போக்கிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. சிறிதளவு ஃபிரெஷ்ஷான இஞ்சியை அரைத்து, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து கொள்ளவும். உங்களுக்கு ஏற்பட்ட வயிற்றுப்போக்கு நிற்கும் வரை இந்த கலவையை ஒரு நாளைக்கு 1 முறையாவது சாப்பிடுங்கள்.

 புதினா, உப்பு மற்றும் சர்க்கரை நீர்:

 வயிற்றுப்போக்கின் போது நம் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் எண்ணிக்கையை பராமரிப்பது முக்கியம். புதினா, சர்க்கரை மற்றும் உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து ஒரு ஆரோக்கியமான பானம் மூலம் வயிற்றுப்போக்கின் போது எலக்ட்ரோலைட்ஸ்களின் எண்ணிக்கையை எளிதாக பராமரிக்கலாம். புதினா இலைகள் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கை குணப்படுத்துகின்றன. இதில் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் உப்பு நம் உடலில் எலக்ட்ரோலைட் பேலன்ஸ் மற்றும் நீர் அளவை பராமரிக்க உதவுகிறது. 1 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் அல்லது புதினா பொடி ஆகியவற்றை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். 

அரிசி தண்ணீர்:

வயிற்றுக் கோளாறுகளுக்கு அரிசி நல்லது, அதே போல அரிசி நீரும் (Rice Water) வயிற்றுப்போக்குக்கு ஒரு சிறந்த தீர்வாகும். இது உங்கள் வயிற்றை மென்மையாக்க உதவுவதோடு மற்றும் உங்கள் உடலை ஹைட்ரேட்டாக வைக்க உதவுகிறது. அரிசி தண்ணீர் தயாரிக்க 2 கப் தண்ணீரில் 1 கப் அரிசியை போட்டு கொதிக்க வைக்கவும். அரிசி வெந்தவுடன் அதனை வடிகட்டி அந்த அரிசி தண்ணீரை (அரிசி கஞ்சி தண்ணீரை) சிறிது நேரம் அப்படியே விட்டுவிடவும். இந்த கஞ்சி தண்ணீர் க்ளவுடி & திக்காக மாறும் வரை ஆற விடுங்கள். வயிற்றுப்போக்கு நிற்கும் வரை 1 நாளைக்கு 1 முறையாவது இதனை பருகுங்கள்

No comments:

Post a Comment