தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மீனம்பாக்கத்தில் அதிகம்பட்சமாக 14 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
சென்னையை போன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
ராணிப்பேட்டை
வேலூர்
No comments:
Post a Comment