சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற இந்த ஆலோசனையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், துறைச் செயலர்கள் பங்கேற்றனர்.
மகளிர் உரிமைத்
தொகையை எந்தெந்த வழிமுறைகளில் வழங்குவது, இதற்கான வழிகாட்டுநெறிமுறைகள்,கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத்் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் எடுக்
கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில்,வழிகாட்டு நெறிமுறைகளுடன்
கூடிய அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
உரிமைத் தொகைக்கு இணையதளத்தின் வழியே விண்ணப்பம் செய்வது, வயது வரம்பை நிர்ணயிப்பது, தேவையான ஆவணங்களாக எவற்
றைக் கோருவது என்பன உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ 1,000 வழங்கும் திட்டம், திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, திட்டத்துக்கான அறிவிப்பு வெளியாவதில் தாமதம்
நிலவியது.
இந்தத் தாமதம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பின.
இதனிடையே, சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ரூ.1,000 உரிமைத் தொகை குறித்த
அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், மகளிர் உரிமைத் தொகை
யாருக்செல்லாம் வழங்கப்படும் என்பது குறித்த விளக்கத்தையும் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவ மகளிர், ஒன்றுக்கும்
மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் மகளிர், கட்டுமானத் தொழிலில்
பணிபுரியும் மகளிர், சிரிய கடைகளில் பணிபுரியும் மகளிர் உள்ளிட்டோர்
மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும், விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்
படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி,வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை, முதல்வர் தலைமையி
லான ஆலோசனை திங்கள்கிழமை நடைபெற்றதைத் தொடர்ந்து, விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment