தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஜூன் 12 ஆம் தேதியும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில், 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இருப்பதால் அவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமில்லை என்றும் தேவைப்படும் பள்ளிகள், மாணவர்களின் நலன் கருதி மாலை நேர வகுப்புகளை நடத்தலாம் என்று கூறியுள்ளது.
No comments:
Post a Comment