ந.க.எண்.000523/எஃப் 1/2023 நாள். 28.06.2023
பொருள்: சென்னை- 6 - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் - 1, 2 & 3 ஆம் வகுப்புகளுக்கான
குறுவள மையக் கூட்டம் 08.07.2023 மற்றும் 4, 5ஆம்
வகுப்புகளுக்கான குறுவள மையக் கூட்டம் 15.07.23 ஆகிய நட்களில் நடைபெறுதல் சார்ந்து -
முதற்கட்டமாக மாநில முதன்மைக் கருத்தாளர்களுக்கான கூட்டம் 1, 2 & 3ஆம்
வகுப்புகளுக்கு 03.07.2023 மற்றும் 4, 5 ஆம் வகுப்புகளுக்கு 04.07.23 அன்று சென்னை-08,
எழும்பூர், மாகாண மகளிர் அரசு மாதிரி மேல்நிலைப்
பள்ளி நடத்துதல் - தொடர்பாக.
பார்வை:
1. 2022 - 23 ஆம் ஆண்டிற்கான பயிற்சி காலஅட்டவணை.
2. மாவட்ட திட்டஇயக்குநர் தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனை பணிமனை
கூட்டப்பொருள் நாள். 01.07.2022.
3. மாவட்ட திட்ட இயக்குநர் தலைமையில்
நடைபெற்ற மீளாய்வு கூட்டம் நாள். 19.07.2022.
4. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் தலைமையில் நடைபெற்ற
மீளாய்வு கூட்டம் நாள். 13.01.2023.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் 2022-2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான 1, 2 & 3 ஆம் வகுப்புகளுக்கு மாநில முதன்மைக் கருத்தாளர்களுக்கான கூட்டம் 03.07.23
மற்றும் 4, 5ஆம் வகுப்புகளுக்கு 04.07.23 அன்றும் மாநில அளவில் சென்னை- 6
- மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தப்படவுள்ளது.
எனவே, 03.07.23 மற்றும் 04.07.23 ஆகிய நாட்களில் பங்கேற்பாளர்கள்
பங்கேற்கும் வகையில் முதல்வர்கள் தத்தம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளர் / முதுநிலை விரிவுரையாளர் ஏற்கனவே மூன்று பருவங்களிலும் எண்ணும் எழுத்தும் பயிற்சி பெற்றவர்களை (இணைப்பில் உள்ள எண்ணிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு) தெரிவு செய்து, அனுப்பி
வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் கூடுதலாக பங்கேற்பாளர்கள்
தேவைப்படும் பட்சத்தில் உரிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களை நிறுவன
முதல்வர்கள் அணுகி கூடுதலாக தேவையுள்ள பங்கேற்பாளர்களை ஏற்கனவே மூன்று பருவங்களிலும் எண்ணும் எழுத்தும் பயிற்சி பெற்றவர்களை தெரிவு செய்து,
பணிமனையில் பங்கேற்கும் வகையில் பணிவிடுவிப்பு செய்து அனுப்பி வைக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment