புவிதொடுப்பான கம்பி தரையின் அடியில் இருக்கும் பொழுது, அதனைச் சுற்றி இருக்கின்ற மண்ணானது அந்த கம்பியை விட அதிக மின் எதிர்பாற்றலைக் (electrical resistance) கொண்டிருந்தால், உபரி மின்சாரத்தை நிலத்திற்கு அனுப்பி சமநிலை படுத்த முடியாது. எனவே, கம்பிக்கும் அதனை சுற்றி இருக்கின்ற மண்ணுக்கும் இடையே நல்ல பிணைப்பு இருக்க வேண்டும்,
அதே போல மண்ணின் மின் எதிர்பாற்றல் கம்பியை விட குறைவாக இருக்க வேண்டும், அப்பொழுது தான் உபரி மின்சாரத்தை எளிதாக நிலத்திற்கு கடத்திவிட முடியும். அதற்காக தான், நிலக்கரியும் உப்பும் புவிதொடுப்பிற்கான அந்த குழியில் போடப்படுகிறது.
ஒரு மின் இணைப்புக்கான புவிதொடுப்பு அமைக்க, மின் இணைப்பின் திறனைப் பொருத்து குறிப்பிட்ட ஆழமுள்ள குழியைத் தோண்ட வேண்டும், அந்த மண்ணில் நிலக்கரி இருந்தால், ஈரப்பதத்தை நன்றாக தக்க வைத்துக் கொள்ளும், உப்பு புவிதொடுப்பிற்கான கம்பி, மண், ஈரப்பதம் ஆகியவற்றுக்கு இடையே மின்னோட்டத்திற்கு ஏற்ப நல்ல பிணைப்பை ஏற்படுத்தும்.
இந்த முறையால், மின்னல் மற்றும் அதிக மின்னோட்டம் நம் மின் இணைப்பில் பாய்ந்திட நேர்ந்தால், அது புவிதொடுப்பு கம்பி வழியாக நிலத்திற்கு கடத்தப்பட்டு விடும்.
புவித்தொடுப்பு கம்பியின் நீளம், அகலம், குழியின் ஆழம், நிலக்கரி மற்றும் உப்பின் அளவு, இவையெல்லாம், மின் இணைப்பைப் பொருத்து மாறுபடும்,
எவ்வளவு மின்சாரம் அந்த இணைப்பில் பாயும், உபரி மின்சாரம் எவ்வளவு பாய்ந்தால், அதை நிலத்திற்கு கடத்தி சமநிலைப் படுத்த முடியும் போன்ற கூறுகளின் அடிப்படையில், அதன் கணக்கீடு மாறுபடலாம்.
No comments:
Post a Comment