பற்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய கிராம்பு ஒரு சிறந்த கை வைத்திய பொருளாக விளங்குகிறது.
எனவே சொத்தை பல்லினால் ஏற்படும் வலியினை குறைக்க இரவு உறங்குவதற்கு முன் ஒரு கிராம்பினை எடுத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து நன்றாக கடிக்க வேண்டும்.
கிராம்பில் உள்ள மூலிகை தன்மை பற்களில் உள்ள கிருமிகளை உடனடியாக அழித்து, பற்களில் ஏற்படும் வலிகளை உடனடியாக குணப்படுத்தும்.
புதினா
அசைவ உணவுகளில் அதிகளவு பயன்படுத்தும் புதினா பல் வலி உடனே குணமாக பயன்படுகிறது. எனவே சிறிதளவு புதினாவை பல் வலி உள்ள இடத்தில் வைத்து நன்றாக மெல்ல வேண்டும். புதினாவின் சாற்றிற்கு பல் வலி பறந்தோடிவிடும்.
கொய்யா இலை
கொய்யா இலையில் ஆன்டி மைக்ரோபியல் என்னும் மூலக்கூறுகள் உள்ளது. இது பற்களில் ஏற்படும் அழற்சியை குணப்படுத்தும். எனவே பல் வலி ஏற்படும் பொழுது 2 அல்லது 3 கொய்யா இலைகளை எடுத்து வாயில் போடு நன்றாக மெல்ல வேண்டும், இவ்வாறு செய்வதன் மூலம் பல் வலி உடனே குணமாகும்.
அல்லது 5 கொய்யா இலைகளை எடுத்து அரை கப் தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து, வடிகட்டி மிதமான சூட்டில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர பல் வலி குணமாகும்.
இஞ்சி
பொதுவாக பல் வலி பிரச்சனையால் அடிக்கடி அவஸ்த்தை படுபவர்கள் சிறிதளவு இஞ்சி சாறை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளிப்பதன் மூலம் பல் வலி குணமாகும்.
உப்பு நீர்
உப்புநீர் ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இது பற்களுக்கு இடையில் சிக்கியிருக்கும் உணவுத் துகள்கள் மற்றும் குப்பைகளை தளர்த்த உதவும். எனவே உப்பு நீர் வீக்கத்தை குறைக்கவும், வாய்வழி காயங்களை குணப்படுத்தவும் உதவுகிறது.
1/2 டீ ஸ்பூன் உப்பை எடுத்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து பற்களில் படும்படி கொப்பளியுங்கள்.
No comments:
Post a Comment