உடல் பருமனைக் குறைத்தல், மாரடைப்பைத் தடுத்தல் உட்பட பல நோய்களைத் தீர்க்கும் பப்பாளி விதை:இதனை எப்படி சாப்பிடுவது? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, May 27, 2023

உடல் பருமனைக் குறைத்தல், மாரடைப்பைத் தடுத்தல் உட்பட பல நோய்களைத் தீர்க்கும் பப்பாளி விதை:இதனை எப்படி சாப்பிடுவது?

உடல் பருமனைக் குறைத்தல், மாரடைப்பைத் தடுத்தல் உட்பட பல நோய்களைத் தீர்க்கும் பப்பாளி விதை:இதனை எப்படி சாப்பிடுவது?
பப்பாளி விதைகளை வீசி எறியாமல், சேமித்து வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

 சளி மற்றும் காய்ச்சல் தடுப்பு

  பப்பாளி விதையில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவொலாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களின் விளைவைக் குறைக்கிறது. இது தொற்று அபாயத்தைக் குறைக்கிறது. சளி மற்றும் காய்ச்சல் போன்ற பல நோய்களின் அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது. 

 கொலஸ்ட்ரால் அளவு குறையும் 

 கொழுப்பு அமிலங்கள் பப்பாளி விதைகளில் காணப்படுகின்றன. இவை இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றன. தமனிகளில் பிளேக் குறையும் போது, ​​இரத்த அழுத்தம் குறைகிறது. அத்தகைய சூழ்நிலையில், மாரடைப்பு, கரோனரி தமனி நோய் மற்றும் மூன்று நாள நோய் போன்ற இதய நோய்களைத் தவிர்க்கலாம். 

 எடை இழப்பில் உதவும்

  பப்பாளி விதையில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது, செரிமான அமைப்பு நன்றாக இருந்தால், நாம் உடல் பருமனுக்கு பலியாகாமல் இருப்பதுடன், அதிகரிக்கும் எடையும் குறையும். 

 பப்பாளி விதைகளை எப்படி உட்கொள்வது?

  முதலில் விதைகளை தண்ணீரில் கழுவவும், பின்னர் அவற்றை பல நாட்களுக்கு வெயிலில் நன்கு உலர வைக்கவும். பின் அதை அரைத்து பொடியாக்கிக்கொள்ளவும். இந்த பொடியை ஷேக், இனிப்புகள், ஜூஸ் போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம். இதன் சுவை கசப்பாக இருப்பதால், இனிப்புடன் கலந்து சாப்பிடுவது நல்லது. ​

எப்படி சாப்பிடலாம்? 

 முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நல்லது என்பதால் அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது. அளவோடு சாப்பிட வேண்டும். ஏனென்றால் தொடக்கத்தில் சிலருக்கு அது வயிற்றுப் போக்கை உண்டாக்குவதாக இருக்கலாம். அதற்காக பயம் கொள்ளத் தேவையில்லை.

 ஸ்மூத்தி, மில்க் ஷேக், ஜூஸ் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். ஒன்றிரண்டாக அரைத்து ஃபுரூட் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம். பப்பாளி விதையோடு தேன் அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிங்கள்.

 முடிந்தவரையில் வெ்ளளை சர்க்கரையை தவிர்க்கலாம். பப்பாளி விதைகளை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு அதை சூப், ரசம் போன்றவற்றில் தூவிக் கொள்ளலாம். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியுடன் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம்.

No comments:

Post a Comment