பழைய மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இடையே உள்ள வித்தியாசங்கள்! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, May 28, 2023

பழைய மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இடையே உள்ள வித்தியாசங்கள்!

பழைய மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இடையே உள்ள வித்தியாசங்கள்!
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டடத்திற்கும், பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம். 

 இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. 

 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரம்மாண்ட ஹால், நூலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், உணவுக்கூடம், விசாலமான வாகன நிறுத்த பகுதிகள் என பல்வேறு வசதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாகவும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.

 பழைய நாடாளுமன்ற கட்டடம் வட்ட வடிவில் இருக்கும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி  திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கல்வெட்டை திறந்து வைத்த பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்றம் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை கவுரவித்தார்.

 தொழிலாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்தும், நினைவு பரிசுகளையும் பிரதமர் வழங்கினார். 

 புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கும், பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே பார்க்கலாம்: 

 பழைய நாடாளுமன்ற கட்டடத்தை பிரிட்டிஷ் கட்டட கலைஞர்களான எட்வின் லுட்யென்ஸ், ஹெர்பர்ட் பேகர் வடிவமைத்தனர். புதிய கட்டடத்தை அகமதாபாத்தை சேர்ந்த HCP டிசைன் நிறுவனம் வடிவமைத்தது. 

 பழைய நாடாளுமன்ற கட்டடம் சன்சத் பவன் என அழைக்கப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம் சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படுகிறது. 

 1921-ம் ஆண்டில் பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 1927-ம் ஆண்டு திறப்பு திறக்கப்பட்டது. 2020-ம் ஆண்டில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் திறக்கப்பட்டது.

 பழைய நாடாளுமன்ற கட்டடம் 83 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்து. புதிய நாடாளுமன்ற கட்டடம் 970 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

 பழைய நாடாளுமன்ற கட்டடம் 48 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டடம் 65 ஆயிரம் 500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.

 பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் மைய மண்டபம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அதிநவீன அரசியல் சாசன அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 

 பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவையில் 545 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 250 உறுப்பினர்களும் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தற்போது புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவையில் 888 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 300 உறுப்பினர்களும் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment