பலா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி,ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பலாக்கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நம் உடல் செல்களில் உள்ள கழிவுகளை நீக்கி, புற்றுநோய் வராமல் காக்கும்.
பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னைகளை சரிசெய்கிறது.
பலா, குடல்களில் ஏற்படும் நோய்களைக் போக்கி, குடல்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
பலாப்பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்குவதுடன், எலும்பு தேய்மானம், மூட்டு வலி பிரச்னைகளையும் குணப்படுத்த உதவுகிறது.
பலாப்பழம், ரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவை சரியான அளவில் பராமரித்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
பலாப்பழத்தில் உள்ள கரோட்டினாய்டு சத்து, டைப் 2 நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
இதிலுள்ள கார்போஹைர்ரேட், உடலில் ஆற்றலை அதிகரிக்கும்.
பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது.
மேலும், உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.
பலாப்பழத்தில் காப்பர் சத்து நிறைந்துள்ளதால் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்து, தைராய்டு ஹார்மோன் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கிறது.
இதிலுள்ள வைட்டமின் பி6, ரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டின் அளவைக் குறைத்து,
இதய பிரச்னைகளை குணப்படுத்தும்.
இதிலுள்ள இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் சி சத்துகள், புது ரத்தத்தை உருவாக்குவதோடு, ரத்தசோகை பிரச்னைகளையும் சரிசெய்கிறது.
இந்த விஷயங்களில் கவனம் தேவை
பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக, உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கும்.
இனிப்பு மற்றும் கலோரி அதிகம் இருப்பதால் நீரிழிவு இருப்பவர்களும், பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பவர்களும் பலாப்பழம் சாப்பிடக்கூடாது.
குடல்வால் அலர்ஜி உள்ளவர்கள் பலாபழத்தை சாப்பிடக்கூடாது.
பலா விதைகள் அதிகமாக சாப்பிடுவது மலச்சிக்கல், புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்போவது, வயிற்று வலி போன்றவற்றை உண்டாக்கும்.
பலா பிஞ்சினை அதிகளவில் உண்பதால் செரிமான பிரச்னை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.
சிலருக்கு அதன் வாசம் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். எனவே அவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment