ஒன்றாகச் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் மற்றும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிடக் கூடிய உணவுகள் என்னென்ன? - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, May 3, 2023

ஒன்றாகச் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் மற்றும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிடக் கூடிய உணவுகள் என்னென்ன?

ஒன்றாகச் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் மற்றும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிடக் கூடிய உணவுகள் என்னென்ன?
உணவே மருந்து என்று கூறும் அற்புத ஒளிவிளக்கு நமது பாரம்பரிய ஆயுர்வேதம் தான். இன்றைய காலகட்டத்தில் நல்ல சத்தான உணவுகளைத் தவிர்த்து, சக்கைகளை சாப்பிட்டு உடல் நலனைக் கெடுத்துக் கொள்வோர் பெருகிவிட்டனர்.

 மேலும் வகை வகையான ரெசிப்பிக்களை ருசிக்கும் ஆர்வம் வேறு பலவிதமான நோய்களுக்கு அழைப்பு விடுக்கத் தொடங்கிவிட்டது. இதனை இதனுடன் சேர்த்து சாப்பிடலாம், இவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. ருசிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சமைக்கப்படும் உணவுகள், உடலுக்கு சத்து தருவதற்கு பதிலாக நச்சுக்களை உருவாக்கிவிடுகின்றன.

 ஒவ்வொரு உணவையும் சாப்பிடுவதற்கு ஒரு முறை இருக்கிறது என்கிறது ஆயுர்வேதம். ஒன்றாகச் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளை, அவ்வாறு சாப்பிட்டால் ஜீரணக் குறைபாடுகள், ஒவ்வாமை ஏற்படுவதுடன், உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கச் செய்துவிடும். ஒவ்வொரு உணவுக்கும் பிரத்யேக சத்துக்களும், குணநலன்களும், சுவையும் உள்ளது. அவை அத்தன்மைக்கு ஏற்ப ஜீரண மண்டலத்தில் செயல்படும். 

சில உணவுகளை சாப்பிட்ட பின் வயிறு உப்பிசம், அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படக் காரணம் குறிப்பிட்ட உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவினை தெரியாமல் சாப்பிட்ட காரணத்தால், உடல் தன் எதிர்ப்பினை இவ்வாறு தெரிவிக்கிறது.

 உதாரணத்துக்கு பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிடுவது தவறு. பலரும் அது சத்தான உணவு என்றே நினைப்பார்கள். இரண்டும் அதிக சத்துடையவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவற்றை ஒன்றாகச் சாப்பிடும் போது வயிற்றில் ஜீரண உறுப்புக்களை மந்தமாக்கி, இவை டாக்ஸின் எனப்படும் நச்சுக்களை உருவாக்கி விடும். கேரட்டையும் முள்ளங்கியையும் சேர்த்து சமைக்கக் கூடாது.

 பாலுடன் சாக்லெட்டைச் சேர்த்து சுவைக்க கூடாது. அசைவ உணவில் இறைச்சியுடன் வினிகரை சேர்த்து சமைக்கக் கூடாது. இது போன்று பல 'கூடாது'கள் உள்ளன. 

அவற்றை தெளிவாக அறிந்து கொண்டு உணவைத் தயாரிக்க வேண்டும். மேலும் எந்த உணவைச் சேர்க்க வேண்டும், எதனைத் தவிர்க்க வேண்டும், எந்தப் பருவத்தில் எவ்வகை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து உணவு பழக்கத்தை முறைப்படுத்திக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது. 

கீழ்க்கண்ட உணவுகளை ஒன்றாக ஒருபோதும் சாப்பிடக் கூடாது. 

 பீன்ஸ் 

 பீன்ஸுடன் பால், இறைச்சி, யோகர்ட், முட்டை, மீன், சீஸ், பழங்கள் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடக் கூடாது.

 தானியங்கள், காய்கறி, பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

 வெண்ணெய் மற்றும் நெய்

  நெய்யை பயன்படுத்தும் அளவுக்கு வெண்ணெயை உணவுகளில் பயன்படுத்த முடியாது. 

 பருப்பு, காய்கறிகள், பீன்ஸ், பாதாம், இறைச்சி, மீன், முட்டை, சமைத்த பழங்கள் ஆகியவற்றுடன் சேர்க்கலாம். 

 பாலாடை சீஸ் எனும் பாலாடைக் கட்டியை சூடான பானங்கள், முட்டை, பழங்கள், பீன்ஸ், பால் மற்றும் யோகர்ட்டுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

 தானியங்கள் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம் முட்டை பால், சீஸ், யோகர்ட், பழம் (குறிப்பாக தர்பூசணி, கிர்ணி) கிச்சரி, உருளைக்கிழங்கு, இறைச்சி, மீன், பீன்ஸ் போன்றவற்றுடன் சேர்த்தோ, இணை உணவாகவோ சாப்பிடவே கூடாது. 

பாலுடன் முட்டையும் சத்தான உணவுக்கான ஒரு நல்ல தேர்வு. பூசணி, கிர்ணி உள்ளிட்ட நீர்ச்சத்து காய்கறி மற்றும் பழம் பால், வறுக்கப்பட உணவு வகைகள், கஞ்சி, முட்டை மற்ற நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்கலாம். 

ஆனால் இதனை தனியாக சாப்பிடுவதே நல்லது. தானியங்கள் பழங்களை தானியத்துடன் இணைத்து சாப்பிடக் கூடாது பீன்ஸ், சீஸ், முட்டை, இறைச்சி, மீன், நட்ஸ், காய்கறிகள், யோகர்ட் போன்றவற்றை தானியங்களுடன் சேர்க்கலாம். 

 காய்கறிகள் பழங்கள் மற்றும் பாலை காய்கறிகளுடன் இணைத்து உண்ணக் கூடாது. தானியங்கள், மற்ற காய்கறிகள், யோகர்ட், இறைச்சி, மீன், நட்ஸ், பீன்ஸ், முட்டை, சீஸ் ஆகியவற்றை காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

 கீரை உள்ளிட்ட தாவர உணவுளை இரவில் உண்ணக் கூடாது. இவற்றுடன் தர்பூசணி, பூசணிக்காய், கிர்ணி, வெள்ளரிக்காய், பால், சீஸ், யோகர்ட் போன்றவற்றை இரவில் அதிகம் சாப்பிடக் கூடாது. 

 காய்கறிகள், தானியம், பீன்ஸ், இறைச்சி, மீன், நட்ஸ் ஆகியவற்றை கீரையுடன் சேர்த்து சாப்பிடலாம். 

 ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் முக்கியமான உணவுப் பழக்கங்கள்:

 குளிர் காலங்களில், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளையும், மசாலா மற்றும் எண்ணெய் அதிகமாகவும் பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும்.

 போலவே, வெயில் காலத்தில் புளிப்பு மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். நன்றாக பசி எடுக்கும் முன்னரே அதிகளவு உணவினை சாப்பிடக்கூடாது. சூடான உணவுகளையும் குளிர்ச்சியான உணவையும் கலந்து சாப்பிடக் கூடாது.

 சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகள் வரும் போது அதை அடக்கிக் கொண்டு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். பாலில் ஒரு போதும் உப்பு போடக் கூடாது. அதை துவர்ப்பான பழங்களுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. 

சமையல் செய்யும் போது சரியான பதத்தில் உணவினை வேக வைக்க வேண்டும். அரைகுறையாக வெந்த உணவும், அதிகப்படியாக வெந்த உணவும் ஆரோக்கியத்துக்கு கெடுதல். அன்றைக்கு சமைத்த உணவை அன்றே பயன்படுத்தி விட வேண்டும். 

அதிக நேரம் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து, பின்னர் அவ்வுணவை சாப்பிடும் போது அதிலுள்ள சத்துக்கள் பெரும் அளவுக்கு இழக்கப்படும்.

No comments:

Post a Comment