தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, May 11, 2023

தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
பொதுவாக நரம்புத் தளர்ச்சி உடையவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவதுண்டு. ஆனால், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செவ்வாழைப்பழம் சாப்பிடலாம்.

 செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மெக்னீஷியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் என பல வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன. முக்கியமாக செவ்வாழை ரத்த உற்பத்திக்கு உதவுகிறது, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. 

 சிறுநீரகப் பிரச்னைகளை சரிசெய்கிறது, சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. குடல் இயக்கத்தை சீராக்குகிறது. மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். கல்லீரல் செயல்பாடுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆண்மை குறைபாட்டிற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. கண் பார்வைக்கும் நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

 எப்போது சாப்பிட வேண்டும்? 

 பொதுவாக உணவு சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடக்கூடாது. இரண்டு உணவு வேளைகளுக்கு இடையே சாப்பிடலாம். காலை 11 மணி, மாலை 4 மணி என நேரங்களில் சாப்பிடலாம். காலை வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம். இரவும் சாப்பிட்டு ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு செவ்வாழைப்பழம் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment