எந்தெந்த கீரைகளை உண்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, May 3, 2023

எந்தெந்த கீரைகளை உண்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

எந்தெந்த கீரைகளை உண்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது.

 வெந்தயக் கீரை

 உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள், பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது. 

 முருங்கைக் கீரை

 உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். 
இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை குறைக்கும். ரத்தசோகையை குறைக்கும். 

 அரைக்கீரை 

 உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி பெற்றது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும். தளர்ச்சியை போக்கும். குடல் புண்னை ஆற்றும். குடலுக்கு வலிமையை தரும். தொடர்ந்து அரைக்கீரை சாப்பிட்டால் தேமல், சிரங்கு, சொறி, போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

 சிறுகீரை

  மலச்சிக்களை குறைக்கும். தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான பித்தத்தை குறைக்கும். உடலுக்கு ஊக்கம் அழித்து தளர்ச்சியை போக்கும். 

 அகத்திக்கீரை

  உடலில் காணப்படும் அதிகஅளவு வெப்பத்தை குறைக்கும் குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம், தலைச்சுற்றல், மயக்கம், போன்றவை வராமல் தடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும். 

 மணத்தக்காளி கீரை

  வயிற்று புண்களை போக்கும். குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும். பசலைக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. தாய்பால் பெருகும்.

No comments:

Post a Comment