ரூ 2000 நோட்டு வாபஸ் : எஸ்பிஐ வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, May 21, 2023

ரூ 2000 நோட்டு வாபஸ் : எஸ்பிஐ வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ரூ 2000 நோட்டு வாபஸ் : எஸ்பிஐ வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஒரே நேரத்தில் ரூ.20000 மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை வங்கியில் மாற்றும்போது பொது மக்கள் அடையாள அட்டை ஏதும் கொடுக்கத் தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. 
மேலும், இதற்காக கோரிக்கை படிவம் ஏதும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது. 

 இது தொடர்பாக இன்று (மே 21) ஆம் தேதி எஸ்பிஐ ஒரு சுற்றறிகையை வெளியிட்டுள்ளது. 

அதில், ரூ.2000 நோட்டுகளை மாற்ற கோரிக்கை படிவம், அடையாள அட்டை தேவையில்லை என்று கூறியதோடு ரிசர்வ் வங்கியின் மற்ற விதிமுறைகள் அனைத்தும் அப்படியே பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது. 

 முன்னதாக கடந்த 19 ஆம் தேதி, ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 ஆகும். 

 இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், “2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.

 பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும். எந்த ஒரு வங்கிக் கிளையிலும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே. இதில் கட்டுப்பாடுகள் கிடையாது" என்று தெரிவித்தது.

No comments:

Post a Comment