ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் (TET MARK CERTIFICATE) சான்றிதழ் வெளியீடு
தேர்வு வாரியம் அறிவிப்பு
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்துவிதமான பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தகுதித்தேர்வு இரு தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரிய முடியும்.
அந்த வகையில் இந்த தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2022-ம் ஆண்டுக்கான தகுதித்தேர்வு முதல்தாள் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 1 லட்சத்து 53 ஆயிரத்து 23 பேர் எழுதினர். அதில் 14 சதவீதம் பேர் மட்டுமே (21,543 பேர்) தேர்ச்சி பெற்றனர்.
இதைத்தொடர்ந்து 2-ம் தாள் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 3-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த தேர்வை 2 லட்சத்து 54 ஆயிரத்து 224 பேர் எழுதினர். இவர்களுக்கான முடிவுகள் கடந்த மாதம் 28-ந்தேதி வெளியானதில் 15 ஆயிரத்து 430 (6 சதவீதம்) பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தகுதி மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வை நடத்திய ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அவற்றை பட்டதாரிகள் https://www.trb.tn.gov.in/ எனும் இணையதளத்தில் சென்று அடுத்த 3 மாதங்களுக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment