தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் ‘டான்செட்' நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
இதேபோல், எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடப்பாண்டு முதல் பொது என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் சீட்டா தேர்வில் வெற்றி அடையவேண்டும்.
அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான ‘டான்செட்' தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதி நடந்தது.
இதில் எம்.பி.ஏ. தேர்வை 22 ஆயிரத்து 774 பேரும், எம்.சி.ஏ. தேர்வை 9 ஆயிரத்து 279 பேரும் எழுதினர். தொடர்ந்து சீட்டா தேர்வு மார்ச் 26-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 4,350 மாணவர்கள் எழுதினர்.
இந்த தேர்வுகளுக்கான முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. மாணவர்கள் www.tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment