வங்கி கடனுக்கு மாதத்தவணை உயரவில்லை ! | The monthly payment for the bank loan has not increased! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, April 14, 2023

வங்கி கடனுக்கு மாதத்தவணை உயரவில்லை ! | The monthly payment for the bank loan has not increased!

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாசின் தலைமையில் 6 உறுப்பினர்கள் அடங்கிய நிதி கொள்கைக்குழு, 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி அதாவது ‘ரெப்போரேட்’டை கூட்டவோ, குறைக்கவோ செய்கிறது. அந்தவகையில் கடந்த மே மாதம் முதல் இதுவரை வங்கிகள் வாங்குகிற கடனுக்கான வட்டி 6 முறை உயர்த்தப்பட்டதால், வட்டிவிகிதம் 2.50 சதவீதம் உயர்ந்து, 6.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 


இவ்வாறு ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தை உயர்த்தினால் வங்கிகள், தான் வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்தி அதை மக்கள் தலையில் சுமத்திவிடுகிறது. இதனால் வாகன கடன், வீட்டு கடன் மற்றும் சிறு-குறு-நடுத்தர தொழில் நடத்துபவர்கள் வாங்கிய கடன் உள்பட அனைத்து கடன்களுக்கும் வட்டிவிகிதம் உயர்த்தப்படுவதால், கடன் வாங்கி மாதாந்திர தவணை செலுத்துபவர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகிறார்கள். ஒன்று மாதாந்திர தவணை கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை, இல்லையென்றால் தவணைக்காலம் நீட்டிக்கப்பட வேண்டிய நிலை. 

இவ்வாறு வங்கிகளில் வாகன கடனுக்கான வட்டி உயர்ந்ததால் 2022-ல் இருசக்கர வாகன விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது. இதுதான் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பாதிப்புக்கும் காரணம். இத்தகைய சூழ்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நடந்த நிதி கொள்கைக்குழு கூட்டத்தில், இப்போதும் வட்டிவிகிதம் உயர்ந்துவிடுமோ? என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், ‘வட்டிவிகிதம் உயர்த்தப்படவில்லை. 

அதே 6.50 சதவீதம் தான் அடுத்த 2 மாதங்களுக்கு இருக்கும்’ என்ற அறிவிப்பு, ஏற்கனவே கடன் வாங்கி மாதத்தவணை செலுத்துபவர்களுக்கும், புதிதாக கடன் வாங்க நினைத்து கொண்டிருப்பவர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால், இந்த மகிழ்ச்சி அடுத்த 2 மாதங்களுக்கு பிறகு நீடிக்குமா? என்றால் அதில் ஒரு சந்தேக கேள்வியை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ், மக்கள் மனதில் பதிய வைத்துள்ளார். விலைவாசி உயர்ந்தால் அடுத்த கூட்டத்திலேயே வட்டிவிகிதம் உயர்வதற்கான ஜன்னலையும் திறந்து வைப்பது போல் அவரது பேச்சு அமைந்திருந்தது. 

சக்திகாந்ததாஸ் ஒரு கிரிக்கெட் விளையாட்டு ஆர்வலர். அதனால் கிரிக்கெட் விளையாட்டை உதாரணம் காட்டி, ஒரு நிருபர், ‘ஒரு நல்ல ஓவரை பார்த்துவிட்டீர்கள். இனி நீங்கள் நல்ல ‘ஷாட்’ அடிப்பீர்களா?’’ என்று கேட்டபோது, புன்முறுவல் பூத்தபடியே, ‘அது ஒவ்வொரு பந்தையும் பொறுத்துதான் இருக்கும்’ என, சூசகமாக வட்டி உயர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதை தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், செஸ் விளையாட்டில் நாம் காய்களை முன் நகர்த்துவதைத்தான் நினைப்போம். அதுபோல, ‘காலத்தை பொறுத்துதான் நான் நடவடிக்கை எடுப்பேன்’, என்று கூறியிருக்கிறார். 

ஆனால் விலைவாசியை பொறுத்து தான் வட்டிவிகிதம் உயர்த்தப்படுவதால், அரசாங்கம் விலைவாசியை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி, விலைவாசி உயர்வு 4 சதவீதமாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் அதற்கு 2 சதவீதம் குறைவாகவோ, கூடுதலாகவோ இருக்கலாம் என்று நிர்ணயித்துள்ள நிலையில், 5.2 சதவீதமாக இந்தாண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கும் அளவில், 4 சதவீதமாக இருக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம் என்று கூறியுள்ள சக்திகாந்ததாசின் இலக்கை அடைய மத்திய அரசாங்கம்

The 6-member Fiscal Policy Committee headed by RBI Governor Shaktikanta Das meets every two months to increase or decrease the interest rate on loans given to banks by the RBI. In this way, since last May, the interest rate for loans taken by banks has been increased 6 times, the interest rate has increased by 2.50 percent and has been fixed at 6.50 percent.

Thus, if the Reserve Bank raises the interest rate, the banks increase the interest rate on the loans they provide and impose it on the people. As a result, the interest rates for all loans, including car loans, home loans and loans taken by small-small-medium enterprises, are increased, and the borrowers who pay the monthly installments are in great distress. Either the monthly installments need to be increased or the tenure needs to be extended.

Thus, the two-wheeler sales have fallen drastically in 2022 due to the increase in the interest on vehicle loans in banks. This is the reason for the damage to the real estate industry. In such a situation, in the meeting of the Fiscal Policy Committee on Thursday last week, will the interest rate rise even now? While everyone expected that, the interest rate was not raised.

The announcement that the same 6.50 percent will be for the next 2 months has brought immense joy to those who have already taken a loan and are paying monthly installments and those who are thinking of taking a new loan. But, will this happiness last beyond the next 2 months? RBI Governor Shaktikanta Das has left a doubt in people's minds. His speech seemed to open the window for an interest rate hike at the next meeting if prices rise.

Shaktikanta Das is a cricket enthusiast. So giving the example of cricket, a reporter said, 'You have seen a good over. Will you hit a good 'shot' from now on?'', while smiling, he said, ``It will depend on each ball'', hinting that there is a possibility of an increase in interest rates. To answer another question, let us think of moving the pieces forward in a game of chess. Similarly, he said, 'I will take action depending on the time'.

But since the interest rate is raised depending on the inflation, the government should take drastic measures to reduce the inflation. The RBI said the price hike should be 4 percent. But while it has been determined that it may be 2 percent less or more, the central government has said that we have set a target of 4 percent, which is expected to be 5.2 percent this year.

No comments:

Post a Comment