சட்டசபையில் நேற்று பொதுத் துறை மாநில சட்டசபை உள்ளிட்ட துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.
அதற்கு பதிலளித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:முன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வூதியம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
குடும்ப ஓய்வூதியம் 12 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும்.
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை ஒட்டி ஜூன் மாதம் முதல் உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் மருத்துவ உதவித்தொகை, ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 75 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.
No comments:
Post a Comment