Introduction of structured curriculum in all polytechnic colleges | அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, April 1, 2023

Introduction of structured curriculum in all polytechnic colleges | அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம்

Introduction of structured curriculum in all polytechnic colleges | அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம்


நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். புதிய தொழிலிடைக் கல்வி தமிழக சட்டசபையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அந்த துறைக்கான அறிவிப்புகள் வருமாறு:- 

 * அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் நிறுவன வளத் திட்டமிடலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். 

 * 5 அரசு பலவகை தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் தொழிலகங்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய தொழிலிடைக் கல்வி பட்டயப் படிப்புகள், சென்னை, கோவை (2 கல்லூரிகள்), கரூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தப்படும். 

 * அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகளிலும் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவகையில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டம் 

 * 7 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 31 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு 1 ஜிபிபிஎஸ் அளவிலான தொடர் இணையதள வசதி ஏற்படுத்தப்படும். 

 * மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக சென்னை மைய பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும். 

 * கோவை அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மின்சார வாகன இயக்க மையம் நிறுவப்படும். 

 * நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அனைத்து பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளிலும் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். எந்திரங்கள் கொள்முதல் 

 * அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு தேவையான எந்திரங்கள், தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும். 

 * 3 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் கல்வி பயிலும்போதே வருமானம் ஈட்டும் பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தப்படும். வருமானம் ஈட்டும்வகையில் ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி, கெலமங்கலம் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி, தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றில் வருமானம் ஈட்டும் பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தப்படும். 

 * 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை வணிக மேலாண்மை பட்டப் படிப்பும் (எம்.பி.ஏ.) தொடங்கப்படும். (சேலம், திருப்பூர் சிக்கண்ணா, சாத்தான்குளம் (மகளிர்), தொண்டாமுத்தூர், சென்னை ஆர்.கே.நகர் ஆகிய இடங்களில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள்). 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை கணினி பயன்பாட்டியல் பட்டப் படிப்பும் (எம்.சி.ஏ.) தொடங்கப்படும். (திருப்பத்தூர், திருச்சி தந்தை பெரியார், உதகமண்டலம், சென்னை ராணிமேரி கல்லூரி, வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள்). விடுதிகளில் இணைய வசதி

 * அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் எந்திரம் மற்றும் நாப்கின் எரிப்பான் எந்திரம் வழங்கப்படும். 

 * 2012-13-ம் ஆண்டு மற்றும் 2022-23-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 5 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.68.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். * பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.180 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 

 * அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக கட்டப்பட்ட 446 வகுப்பறைகளுக்கு தேவையான தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும்.

 * அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் கூடுதல் உணவுக்கூடம் கட்டப்படும்.

 * அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் வளாகத்தில் உள்ள விடுதிகளில் இணைய வசதி ஏற்படுத்தப்படும். 

 * அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்தில் புதிய கல்விக் கட்டிடம் கட்டப்படும். புதிய பாடப்பிரிவுகள் 

 * மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். 

 * காமராசர் பல்கலைக்கழகத்தில் 500 இருக்கைகள் கொண்ட மனிதவள மேம்பாட்டு பயிற்சி அரங்கம் நிறுவப்படும். 

 * சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபம் புதுப்பிக்கப்படும். 

 * சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் பெண்கள் விடுதி 250 பேர் பயனடையும் வகையில் கட்டப்படும். 

 * தமிழ்நாடு ஆவணக காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். 

 * அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Minister Ponmudi has announced that structured curricula will be introduced in all polytechnic colleges under Nan Mootuvan scheme. New Vocational Education MLAs debated yesterday in the Tamil Nadu Assembly on the Higher Education Department grant request. In response to them, the announcements issued by Minister Ponmudi for that department are as follows:-

  * Learning Management System software integrated with Enterprise Resource Planning will be installed in all higher education institutions at a cost of Rs.150 crore.

  * New Vocational Education diploma courses will be introduced in 5 Government Polytechnic Colleges at Chennai, Coimbatore (2 Colleges), Karur, Villupuram as per the needs of industries.

  * Special centers will be set up in all Government Engineering Colleges to adapt to improved manufacturing technologies. Structured curriculum

  * 7 Government Engineering Colleges and 31 Government Multi-Technical Colleges will be provided with 1 Gbps continuous internet facility.

  * A new skill training center will be set up at Chennai Central Polytechnic College for the benefit of differently abled students.

  * Electric Vehicle Operation Center will be established in Coimbatore Government Polytechnic College and Government Women Polytechnic College.

  * Structured curricula will be introduced in all the various technical colleges under the Nan Muluvan scheme. Purchase of machinery

  * Necessary machinery and equipment will be procured for newly started courses in various government technical colleges.

  * 3 Govt various technical colleges will introduce income earning degree course while students are studying. In order to generate income, an income-generating diploma course will be introduced in Krishnagiri District Oodhangarai Government Polytechnic College, Kelamangalam Government Polytechnic College, Dharmapuri District Kadoor Government Polytechnic College in association with Hosur Tata Electronics.

  * Master of Business Administration (MBA) course will also be launched in 5 Government Arts and Science Colleges. (Government Arts Colleges at Salem, Tirupur Sikkanna, Chatankulam (Makalir), Thondamuthur, Chennai RK Nagar). A Master's degree in Computer Applications (MCA) will also be launched in 5 government arts and science colleges. (Government Arts Colleges at Tirupattur, Trichy Father Periyar, Uthagamandalam, Ranimary College Chennai, Valparai). Internet facility in hostels

  * Government Arts and Science Colleges will be provided with Automatic Napkin Dispensing Machine and Napkin Burner Machine.

  * New buildings will be constructed for 5 Government Arts and Science Colleges starting in 2012-13 and 2022-23 at an estimated cost of Rs.68.5 crore. * Infrastructure facilities in colleges will be improved at an estimated cost of Rs.180 crore under Perundhalaivar Kamarasar College Development Scheme.

  * Necessary logistics will be procured for 446 newly constructed classrooms in Government Arts and Science Colleges.

  * An additional canteen will be constructed in the Anna University Chennai Institute of Technology campus.

  * Internet facility will be provided in hostels in Anna University's Gindi Engineering Campus.

  * A new academic building will be constructed in the Anna University Coimbatore campus. New courses

  * 5 new courses will be started in Madurai Kamarasar University.

  * A 500-seater HRD training hall will be established at Kamarasar University.

  * The Centenary Hall in Chennai University will be renovated.

  * A women's hostel will be constructed in Chennai University's Chepakkam campus to benefit 250 people.

  * A scholarship of Rs.10,000 will be given to research students for carrying out research in the Tamil Nadu Archives and Historical Research Department.

  * In Government Arts and Science Colleges, some courses with low enrollment will be removed and new courses will be started. It says so.

No comments:

Post a Comment