காவல்துறை உதவி ஆய்வாளர் பரமசிவத்தை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, April 19, 2023

காவல்துறை உதவி ஆய்வாளர் பரமசிவத்தை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

காவல்துறை உதவி ஆய்வாளர் பரமசிவத்தை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி காவல்துறை உதவி ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்திய செய்தியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அவருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை காவல்நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மதுரையைச் சேர்ந்த பரமசிவம் (40). இவர் பென்னாலூர்பேட்டை அருகே உள்ள திடீர்நகரில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் சென்று, தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது குறித்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான செய்திகளும் இன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது. 

அதனை இணைத்து காவல்துறை பயிற்சி உதவி ஆய்வாளர் பரமசிவத்துக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது, காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன். குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்

No comments:

Post a Comment