உயர் கல்வியில் எவையெல்லாம் இணையான படிப்புகள் கிடையாது? தமிழக அரசு அரசாணை வெளியீடு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, April 27, 2023

உயர் கல்வியில் எவையெல்லாம் இணையான படிப்புகள் கிடையாது? தமிழக அரசு அரசாணை வெளியீடு

உயர் கல்வியில் எவையெல்லாம் இணையான படிப்புகள் கிடையாது? தமிழக அரசு அரசாணை வெளியீடு
உயா்கல்வியில் இணையான படிப்புகள் எவை என்பது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணை: வேலைவாய்ப்பு நோக்கம் அடிப்படையில், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.காம். கணினி பயன்பாடு படிப்பு பிகாம். படிப்புக்கு இணையானது அல்ல. 

 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.ஏ. கூட்டுறவு படிப்பு, எம்.காம் படிப்புக்கு சமமானது அல்ல. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்எஸ்சி பயன்பாடு கணிதம் படிப்பு எம்எஸ்சி கணிதம் படிப்புக்கு இணையானது அல்ல. கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் வழங்கும் எம்எஸ்சி சுற்றுச்சூழலியல் படிப்பு எம்எஸ்சி நுண்ணுயிரியல் படிப்புக்கு சமமானது கிடையாது. 

 அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.லிட் படிப்பு பி.ஏ. தமிழ் படிப்புக்கு இணையானது அல்ல. சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பிஎஸ்சி. நுண்ணுயிரியல் படிப்பும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பிஎஸ்சி உயிரி-தொழில்நுட்பம் படிப்பும், பிஎஸ்சி விலங்கியல் படிப்புக்கு இணையானது அல்ல.

 அதேபோல், சென்னை மாநில கல்லூரி (தன்னாட்சி அந்தஸ்து) வழங்கப்படும் எம்எஸ்சி நுண்ணுயிரியல் படிப்பு, கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்எஸ்சி உயிரி தொழில்நுட்பம் படிப்பு, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்எஸ்சி மரையன் பயாலஜி படிப்பு, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்எஸ்சி பயோ-மெடிக்கல் சயின்ஸ் படிப்பு ஆகியவை எம்எஸ்சி விலங்கியல் படிப்புக்கு இணையானது கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment