படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகப்படுத்த யு.ஜி.சி., முடிவு
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், கல்வி செலவை சமாளிக்க படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு முடிவு செய்துள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், படிக்கும் போதே சம்பாதிக்கு திட்டத்தை உருவாக்கியுள்ள யு.ஜி.சி., இதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நுாலகம், கணினி மையங்கள், ஆய்வகங்கள் போன்ற இடங்களில் உதவியாளர்களாக அமர்த்தப்படும் மாணவர்களுக்கு ஒரு மணி நேர அடிப்படையில் வேலை வழங்கப்படும். மாதத்தில் 20 நாட்களுக்கு 20 மணி நேரம் மட்டும் பணி செய்ய அனுமதிக்கப்படுவர். அவர்களின் ஆளுமைத் திறனை வளர்க்கவும், படிப்புடன் தொழில்நுட்ப அறிவை பெருக்கவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment