மணிபர்சை ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு
சென்னை, எம்.கே.பி., நகரில், சாலையில் கிடந்த மணிபர்சை ஒப்படைத்த சிறுவனை போலீசார் பாராட்டினர்.
சென்னை, எம்.கே.பி., நகர், புது நகரைச் சேர்ந்த முகமது பைசல், 14, என்ற மாணவர், அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.
நேற்று தன் வீட்டருகே முகமது பைசல் நடந்த சென்ற போது, சாலையில் மணி பர்ஸ் இருந்ததை பார்த்துள்ளார். அதை எடுத்து பார்த்த போது, 200 ரூபாய் பணமும், ஆதார், ஏ.டி.எம்., பான் கார்டு, அலுவலக அடையாள அட்டை உள்ளிட்டவையும் இருந்தன.
இதை பார்த்த சிறுவன், அருகிலுள்ள எம்.கே.பி., நகர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார். காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் ராஜேஷிடம் ஒப்படைத்தார்.
சிறுவனை, உதவி ஆய்வாளரும், போலீசாரும் பாராட்டினர். உரியவரை தேடி, அதை ஒப்படைப்பதாக உறுதி அளித்தனர்.
No comments:
Post a Comment