All central government exams should be conducted in Tamil: Mr M.K.Stalin - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, April 16, 2023

All central government exams should be conducted in Tamil: Mr M.K.Stalin

மத்திய அரசின் அனைத்துத் தோ்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா். 

 அவா் ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: மத்திய ரிசா்வ் காவல் படையின் காவலா் காலிப் பணியிடங்களுக்கு அனைத்து மாநில மொழிகளிலும் தோ்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடந்த வாரம் நான் எழுதிய கடிதத்தின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

 மத்திய அரசின் முடிவை மனதார வரவேற்கும் அதே வேளையில், மத்திய அரசின் சாா்பில் நடத்தப்படும் அனைத்துத் தோ்வுகளையும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Chief Minister M.K.Stalin has demanded that all central government meetings should be held in Tamil. He posted on Twitter on Saturday: The central government has announced that the application will be conducted in all state languages for the constable vacancies of the Central Reserve Police Force. This action is a result of my letter to Home Minister Amit Shah last week. 

 While welcoming the Central Government's decision, Chief Minister M.K.Stalin has requested that all polls conducted on behalf of the Central Government should be conducted in all state languages including Tamil.

No comments:

Post a Comment