8 மாதங்களுக்குப் பின் 10 ஆயிரத்தைத் தாண்டியது, கொரோனா பாதிப்பு | Corona News - Minnalseithi

Latest

Search This Blog

Friday, April 14, 2023

8 மாதங்களுக்குப் பின் 10 ஆயிரத்தைத் தாண்டியது, கொரோனா பாதிப்பு | Corona News

8 மாதங்களுக்குப் பின் 10 ஆயிரத்தைத் தாண்டியது, கொரோனா பாதிப்பு | Corona News

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு அசுர வேகம் எடுக்கிறது. 8 மாதங்களுக்குப்பின் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது. 10 ஆயிரத்தைத் தாண்டியது நாட்டில் தற்போது கொரோனா பரவல் அசுர வேகம் காட்டி வருகிறது. நேற்று முன்தினம் 8 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு, நேற்று அதிரடியாக 10 ஆயிரத்தைத் தாண்டியது. 

கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 158 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு (சரியாக 230 நாட்கள்) இந்த அளவு தினசரி பாதிப்பு அதிகரித்து இருப்பது கோடிட்டுக்காட்டத்தக்கது. இதன் மூலம் தொற்று பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

நேற்று முன்தினம் நாடு முழுவதும் 2 லட்சத்து 29 ஆயிரத்து 958 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன் தினசரி பாதிப்பு விகிதம் 4.42 சதவீதமாக பதிவானது. கேரளாவில் உச்சம் நாட்டிலேயே கேரளாவில்தான் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. நேற்று அங்கு 3 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டது. டெல்லியிலும், மராட்டியத்திலும் தலா 1,100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு நேற்று ஏற்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நாட்டில் நேற்று ஒரு நாளில் 5 ஆயிரத்து 356 பேர் மீண்டுள்ளனர். 

இதுவரை மொத்தம் 4 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 127 பேர் மீண்டுள்ளனர். 19 பேர் பலி கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் 16 பேர் பலியாகினர். நேற்று கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 4-ஐ கணக்கில் காட்டிய நிலையில் ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் 9 பேரும், குஜராத்தில் 2 பேரும், டெல்லி, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாட்டில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். 

இதுவரை தொற்றுக்கு மொத்தம் 5 லட்சத்து 31 ஆயிரத்து 35 பேர் பலியாகி இருக்கிறார்கள். கொரோனா தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 4 ஆயிரத்து 783 அதிகரித்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 998 ஆக உயர்ந்தது. அதிகரிப்பு ஏன்? தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கக்காரணம், ஒமைக்ரான் துணை வைரஸ் ‘எக்ஸ்பிபி.1.16’ தான் என நிபுணர்கள் கூறுகின்றனர். தொற்று அதிகரித்தாலும் ஆபத்து இருப்பதாக தகவல்

After 8 months, the number of corona cases exceeded 10 thousand Corona News

The daily incidence of Corona in India is picking up fast. After 8 months the daily hit crossed 10 thousand. It has crossed 10 thousand and now the spread of corona virus is showing tremendous speed in the country. The day before yesterday, the damage was close to 8 thousand, yesterday it suddenly crossed 10 thousand.

In the last 24 hours, 10 thousand 158 people have been infected. It is worth highlighting that after about 8 months (230 days to be exact) this amount of daily exposure is increasing. With this, the total number of infected people has crossed 4 crore 47 lakh.

The day before yesterday, 2 lakh 29 thousand 958 samples were tested across the country. Its daily incidence rate was reported as 4.42 percent. Peak in Kerala Kerala is the country where daily cases of corona continue to reach the peak. More than 3,400 people were infected there yesterday. More than 1,100 people each have been infected in Delhi and Maharashtra yesterday. Yesterday, 5 thousand 356 people recovered from the infection in the country.

So far a total of 4 crore 42 lakh 10 thousand 127 people have recovered. 19 people died due to corona infection yesterday 16 people died. Kerala reported 4 of the missing corona deaths yesterday, taking the daily death toll to 19. 9 people have died in Maharashtra, 2 in Gujarat, 1 each in Delhi, Kerala, Rajasthan and Tamil Nadu.

A total of 5 lakh 31 thousand 35 people have died of the infection so far. 4 thousand 783 increased in the number of people receiving recovery treatment for corona infection yesterday. Due to this, as of 8 am yesterday, the number of those receiving infection recovery treatment has increased to 44 thousand 998. Why the increase? Experts say that the reason for the increase in the spread of corona infection is Omicron sub-virus 'XP.1.16'. Information that there is a risk even if the infection increases

No comments:

Post a Comment