தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, April 26, 2023

தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் படித்து, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதிய மாணவ, மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் மே 8ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 
மே 8ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை, tnresults.nic.in ; dge1.tn.nic.in ; dge2.tn.nic.in ; dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம்.மே 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெறவிருப்பதால் அதற்கு அடுத்த நாள் தேர்வு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

 முன்னதாக, மே 5ஆம் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மே 7ஆம் தேதி நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன உறைச்சல் ஏற்படும் என்பதால் தேர்வு முடிவுகளை தள்ளி வைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்தது. இது குறித்து கலந்தாலோசனை நடத்தப்பட்டு, நீட் தேர்வுக்கு மறுநாள் மே 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று இன்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

No comments:

Post a Comment