தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அளித்த பதில் வருமாறு:-
புதுமைப்பெண் திட்டத்தில் ‘பாலிடெக்னிக்' கல்லூரிகளில் சேரும் பெண்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பின் காரணமாக இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் 10,500 மாணவிகள் ‘பாலிடெக்னிக்' கல்லூரிகளில் சேர்ந்து உள்ளார்கள்.
ஒரு பாலிடெக்னிக் கல்லூரி ஆரம்பிக்க கிட்டத்தட்ட ரூ.44.38 கோடி செலவு ஆகிறது.
நாங்கள் நிதிநிலையை பார்க்கவில்லை. அதில் சேர்கிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று தான் பார்க்கிறோம்.
அந்த அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில் துறை 4.0 தரத்திற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன் மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் செயல்படுத்த இருக்கிறோம். குறிப்பாக 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ரூ.2,753 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment