து தில்லி: மின்னணு வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், தனது 30 சதவிகித ஊழியர்களுக்கு கடந்த 2022 ஜனவரி - டிசம்பர் காலத்துக்கான ஊதிய உயர்வை அளிக்கப்போவதில்லை என்றுஅ றிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், ஃபிளிப்கார்ட்டில் பணியாற்றும் சுமார் 4,500 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையற்ற பொருளாதார சூழலில், நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மிகுந்த ஆக்கத்தோடு பணி செய்ய வைப்பதை நிறுவன மேலாண்மை கவனத்தில் கொண்டுள்ளது என்று ஊழியர்களுக்கு, நிறுவன முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் வழங்கப்படும் ஊதிய உயர்வானது, இந்த ஆண்டு 30 சதவிகித ஊழியர்களுக்கு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் பல்வேறு பொருளாதார காரணிகளால், ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது பணிப் பலத்தை குறைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment